சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

கொரோனாவால் பலியானவர்களின் நகைகள் திருடப்படுகிறதா? பெரும் அதிர்ச்சி தகவல் !

உலகமே கொரோனாவின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாமல் நாட்டின் அரசுகளும் மக்களும் திணறிவரும் சூழ்நிலையில்  அதன் தொடர்ச்சியாக  கொரோனாவின் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் உச்சத்தில் இருந்து வருகிறது . 

இந்த இக்கட்டான சூழ்நிலையில்  இறந்தவர்களின்  உடல்களை எந்த வித  எதிர்பார்ப்புகள்  இன்றி  அடக்கம் செய்வதும் , பிளாஸ்மா தானம் செய்வதும் , தொழிலாளர்களுக்கு உதவுவது போன்ற  மனிதநேயச் செயல்களில் உயிரை பணையம் வைத்து  ஈடுபடும்  மக்கள் மத்தியில் கொரோனா  தொற்று பரவிவருகிறது. இந்த காலகட்டத்தில் அதனை சீர்குலைக்கும்  வகையில்  சிலரின் நடவடிக்கைகள் அதிர்ச்சியையும் , முகம்சுளிக்கும் வகையில் இருப்பது பெரும் கவலை அளிக்கிறது  

ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவரின் உடல் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டு அவர்களிடம் காண்பிக்கப்பட்டது. ஆனால் இறந்தவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, மோதிரம், வைர மூக்குத்தி மற்றும் வைர கம்மல் ஆகியவற்றை காணவில்லை என்று உறவினர்கள் புகார் தெரிவித்தனர். அவற்றின் மதிப்பு ரூ. 5 லட்சம் என கூறப்பட்டது.. 

அதனை தொடர்ந்து அவர்கள் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்கள் அதன் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பஞ்சாரா ஹில்ஸ் போலீசார், மருத்துவமனை ஊழியர்களிடம் மேற்கொண்ட விசாரணையில்  . சிகிச்சையை அளிக்கும்முன்பே  அந்த பெண்ணின் உடைமைகள் அனைத்தையும் உரியவர்களிடம் முறையாக  ஒப்படைத்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இதையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்தவரின் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

A woman who was admitted with corona infection died with treatment. Following this his body was reported to the family and shown to them. But relatives complained that the gold chain, ring, diamond nose ring and diamond earring worn by the deceased were missing.