தற்போது இருக்கும் கொரோனா அச்சத்தில் மருத்துவமனையில் தீ பிடித்ததால் கொரோனா நோயாளிகள் மற்றும் பிற நோயாளிகளின் நிலைமை என்னவாகும் என்று சிறிதும் யோசிக்காமல் ,பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏதும் எடுக்காததே இதற்கு காரணம் என்று கூறுகின்றனர் .
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 3 பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.அகமதாபாத் நவ்ரங்புரா பகுதியில் உள்ள ஷ்ரேய் என்ற பெயருடைய இந்த மருத்துவமனையில் அதிகாலை 3 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .மருத்துவமனையில் ஏற்பட்ட தீயானது அங்குள்ள மின் கசிவால் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது .
தீயணைப்பு மற்றும் அவசரகால சேவைத் துறை அந்த இடத்துக்கு உடனே வந்த காரணத்தால் ஒரு மணி நேரம் போராட்டத்துக்குபின் இறுதியாக தீ அணைக்கப்பட்டது.
ஆனால், இந்த தீயணைப்பு நடவடிக்கையின் போது அவசர சிகிச்சைப் பிரிவில் மாட்டிக்கொண்ட அனைத்து நோயாளிகளையும் தீயணைப்பு வீரர்கள் உள்ளே நுழைந்து சென்று அவர்கள் உயிரை பணயம் வைத்து காப்பாற்றியுள்ளனர்.அவ்வாறு காப்பாற்றப்பட்ட நோயாளிகளை அரசு மருத்துவமனையான சர்தார் வல்லபாய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மருத்துவமனையில் இருந்த பல நோயாளிகளை உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள் தற்போது கொரோனா பரவுதலை தடுக்கும் வகையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.மருத்துவமனை நிர்வாகத்தின் கவனக்குறைவே இவ்வாறு விபத்து ஏற்பட காரணம் என்று கூறியுள்ள போலீசார், மருத்துவமனை இயக்குநர் பாரத் மகந்த் என்பவரை கைது செய்துள்ளனர்.
Eight people, including three women, were killed in a fire at a hospital in Ahmedabad, Gujarat.