சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

கேரளாவில் திடீர் நிலச்சரிவு -உயிரழிந்தோர் குடும்பத்துக்கு மத்திய அரசு நிவாரணம்

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தின் மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கேரள மாநிலம் மூணாறில் கடந்த ஒரு வாரமாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ராஜகுமாரி, ராஜாக்காடு, நயமக்காடு, கன்னிமலை, தலையாறு, வாகுவாரை, குண்டுமலை, தென்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்து   வெள்ளம்  பெருக்கெடுத்து பெரியவாரை தரைப்பாலம் வழியே ஹெட்வொர்க்ஸ் அணைக்குச் சென்று கொண்டிருக்கிறது. அதிக நீர்வரத்தினால் இந்த தரைப்பாலம் முற்றிலும் சேதமடைந்தது இதனால் இந்தப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.

இந்த சூழ்நிலையில்  நேற்று இரவு ராஜமலை செல்லும் வழியில் உள்ள பெட்டிமுறி எனும் இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு  தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் 20 குடியிருப்புகள் மண்ணிற்குள் புதைந்தன. இந்தக் குடியிருப்புகளில் பெரும்பாலும் தமிழகத் தொழிலாளர்களே வசிக்கின்றனர் என கூறப்படுகிறது 

இப்பகுதியில் தொலைத்தொடர்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டிருந்தது. பல இடங்களிலும் நிலச்சரிவு ஏற்பட்டு பாதையும் அடைக்கப்பட்டிருந்தது.

மேலும் சம்பவ இடத்திலேயே 15 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தது தெரியவந்தது. மேலும், 50க்கும் மேற்பட்டோர் மண்ணிற்குள் புதைத்திருக்கலாம் என்று  தெரிவிக்கபட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இந்தியா பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தந்து ட்விட்டர் பக்கத்தில் கேரளாவின் இடுக்கி ராஜமலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு  ஆழ்ந்த இரங்கல் மற்றும்  துக்கமான இந்த நேரத்தில் என் எண்ணங்கள் துயரமடைந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய என்.டி.ஆர்.எஃப் மற்றும் நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு வருகின்றன என பதிவிட்டுள்ளார்.

 

அதை தொடர்ந்து  நிலச்சரிவில் தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும், என்றும் ,மேலும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வழங்கவும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

 

Rs. 2 lakh relief will be provided and Rs. Prime Minister Modi has also ordered to provide Rs 50,000.