கர்நாடக நெடுஞ்சாலையில் 8000ம் மேல் ஆலமரங்கள் 107வயதில் அசத்தும் பெண்மணி இன்னும் பல சுவாரசியம்
பிரபல செய்தி நிறுவனம் பிபிசி 2016-ம் ஆண்டுக்கான உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்களின் பட்டியலை வெளியிட்டது.அதில் கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் பெங்களூர் அருகே உள்ள கூதூர் கிராமத்தை சேர்ந்த திம்மக்கா 107 வயதான பாட்டியும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
மேலும் 107 வயதான திம்மக்காவை சாதனை பெண்மணி என்று கர்நாடகாவில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளும் மாநில அரசும் சேர்ந்து ராஜ்யோத்சவா, கன்னட ரத்னா உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வழங்கி சிறப்பித்துள்ளது .
இதனை தொடர்ந்து உலக அளவில் வருடத்தில் ஒருமுறை செல்வாக்குமிக்க 100 பெண்களை தேர்வு செய்யும் பிபிசி நிறுவனம் திம்மக்காவை மரங்களின் தாய் என கவுரவித்துள்ளது கொண்டாடப்படுகிறது . அதன் அடிப்படையில் பிபிசி வெளியிட்ட பட்டியலில் பெரிய பெரிய நிறுவனங்களின் பெண் அதிகாரிகளும் , தொழில் அதிபர்களும், எழுத்தாளர்களும், நடிகைகளும், விளையாட்டு வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடக்கத்து .
பொட்டல் காடாக காட்சி அளித்த அந்த பகுதி, தற்பொழுது சோலை வனமாக மாறுவதற்கு காரணமாக இருந்த இந்த பெண்மணியின் சேவையை பாராட்டி தேசிய குடிமகள் விருது, நான்கு குடியரசு தலைவர்களிடம் இருந்தும், மூன்று பிரதமர்களிடம் இருந்தும், முதல்வர்களிடம் இருந்தும் விருதுகள் வாங்கி குவித்துள்ளார் .
இதுபோன்ற நல்ல விஷயங்களில் சற்றும் யோசிக்காமல் முன்வந்த்து பாராட்டுவதும், செயலில் ஈடுபடுவது நடிகர் விவேக் அவர்களின் தனி ஸ்டைலும் கூட .
107-year-old grandmother actor Vivekh pays tribute to Salu Mara Thimmakka who planted hundreds of Banyan trees on Karnataka Highway