சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

ஏழ்மையிலும் நேர்மை லட்சக்கணக்கில் பணம் மற்றும் தங்கம் துப்புறவு பணியாளர்க்கு குவியும் பாராட்டு

மகாராஷ்டிர மாநிலம்  மும்பையை சேர்ந்த சித்தார்த்தின்   மனைவி ஸ்மிதா இவர் நகராட்சி துப்புறவு பணியாளர்களாக பணியாற்றிவருகிறார்.

இந்த நிலையில் சித்தார்த் வீட்டின் அருகே தனது மனைவி பர்ஸ் போலவே இருந்ததால் அதை எடுத்து கொண்டு தனது மனைவி ஸ்மிதாவிடம் காண்பித்துள்ளார். இது தன்னுடைய  பர்ஸ் இல்லை என்று கூறிய ஸ்மிதா அதை இருவரும் திறந்து பார்த்தபொழுது காத்திருந்த அதிர்ச்சி .

பர்ஸ் உள்ளே ரூ 3 லட்சம் மதிப்புடைய தங்கத்தாலியும், பணமும் மற்றும் ஆவணங்களும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை தொடர்ந்து பர்ஸை உரியவர்களிடம்  ஒப்படைக்க இருவரும் முடிவெடுத்துள்ளார்.  இது பற்றி வாட்ஸ் அப்பில் பலர்க்கு பகிர்ந்துள்ளார்.

indiaborder

இதனையடுத்து இந்த  தகவல் தீயாக பரவிய நிலையில் பிரீத்தி என்ற பெண் தன்னுடைய பர்ஸின் முழுவிவரத்தையும், உள்ள பொருட்கள் குறித்தும் சரியாக கூறியுள்ளார்.இதை தொடர்ந்து அவரிடம் பர்ஸை பிரீத்தியிடம்  ஒப்படைத்தனர்.

பர்ஸின் உரிமையாளரான ப்ரீத்தி கூறுகையில், தாலி அடங்கிய பர்ஸை தொலைத்த நான் நாங்கள் கஷ்டப்பட சம்பாரித்த பொருளும் பணமும் எங்களைவிட்டு போனதை நினைத்து   மிகவும் கவலையிலும் , வருத்தத்தில் இருந்த நான், தற்போது  மீண்டும் அது கிடைத்தது பெரும் மகிழ்ச்சி தருகிறது என்று கூறிய அவர் . பலரும் அதை தாங்கள் எடுத்து கொள்ளவே நினைப்பார்கள், ஆனால் சித்தார்த்தும், ஸ்மிதாவும் மிகவும் நேர்மையானவர்கள் என்றும் புகழ்த்துள்ளார்கள்.மேலும் இந்த தம்பத்தினரின்  நேர்மையை பாராட்டி நகராட்சி அவர்களை பாராட்டி உள்ளது.

இதனை அறிந்த சக ஊழியர்கள், கொரோனாவால் உலகமே  பொருளாதாரம் நெருக்கடியில் பெரிதும்  பாதித்து உள்ள நிலையில் அந்த பர்ஸை இருவரும் உரியவரிடம் ஒப்படைத்தது மிகவும் பாராட்டுதலுக்குறியது என கூறி பாராட்டி வருகின்றனர்.

இக்காலகட்டத்தில் இப்படி ஒரு நல்ல மனிதர்கள் இவ்வுலகத்தில் இருப்பதனால்தான் இந்த பூமியானது தனது நிலைப்பாட்டில் இருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.

Poverty Honesty Millions of Money and Gold Siddharth and Wife Smitha Accumulate Compliment to Cleaner