சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

பொது தேர்வில் நடந்த விபரீதம்

school-boy-threatened-with-knife-for-refusing-to-share-answer-sheet
  அருண்   | Last Modified : 19 Jun, 2020 05:25 pm இந்தியா பொது

பொது தேர்வில் நடந்த விபரீதம். விடைத்தாளை காண்பிக்காத  பத்தாம்  வகுப்பு மாணவனை  கத்தியால் குத்த முயன்ற சம்பவம் பேரதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது .

குஜராத் மாநிலமான அகமதாபாத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு  நடைபெற்று வரும் சூழ்நிலையில்  கிருஷ்ணாநகர் எல்லைக்குட்பட்ட தேர்வு மையத்தில் ஒரு அறைக்கு 30 மாணவர்கள் வீதம் தேர்வு எழுதி  கொண்டிருந்த நேரத்தில் ,மாணவர் ஒருவர் தனக்கு அருகில் அமர்ந்து தேர்வு எழுதி கொண்டிருந்த மாணவரிடம் விடைத்தாளை தனக்கு காண்பிக்குமாறு அணுகி உள்ளார் .இதனை அந்த மாணவர் அறையில் இருந்த தேர்வு கண்காணிப்பாளரிடம் தெரிவித்தார் .இதன் அடிப்படையில் தேர்வு கண்காணிப்பாளர் அந்த மாணவனை  மீண்டும் இதுபோன்ற நடவடிக்கையில்  ஈடுபட்டால் தேர்வு அறையில் இருந்து வெளியேற்றி விடுவேன் என்று எச்சரித்துள்ளார் .

பள்ளி மாணவனுக்கு கொடி கயிறே தூக்கு கயிறான சோகம்!!

இதனை தொடர்ந்து ஆத்திரம் அடைந்த மாணவன்   அம்மாணவனை பழி வாங்க துடித்துஉள்ளான்.ஆகையால் தேர்வு முடிந்து அனைவரும் வெளியில் செல்லும்  வரை காத்திருந்து  தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த மாணவனை தாக்க முயன்றுள்ளான்  இதனை சுதாகரித்து  கொண்டு அந்த மாணவன் அந்த மாணவரிடம் இருந்து தப்பித்து சென்று தன்  தந்தையிடம் இது பற்றி கூறி உள்ளான்,இதை கேட்ட அவனது தந்தை மகனை அழைத்து கொண்டு சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றுள்ளார் அப்போது அந்த மாணவன் தன் கையில் வைத்திருந்த கத்தியால் அந்த மாணவரின்  தந்தையும் தாக்க முயன்றுள்ளார் இதனால் அவர்கள் இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் . தேர்வு அறையில் விடைத்தாளை காண்பிக்கமறுத்ததால் சக மாணவனை கத்தியால் கொலை செய்ய முயன்ற கொடூரம் அப்பகுதியில் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது .

மேலும் இதுபோன்ற சம்பவங்கள் மாணவப்பருவதில் கொலைவெறித்தாக்குதல் பெற்றோரிடம் பெரும் கழகத்தை ஏற்படுத்தியுள்ளது.

School boy threatened with knife for refusing to share answer sheet