சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

குறைந்த விலையில் கொரோனா தடுப்பூசி: பிரதமர் மோடி வேண்டுகோள்

 கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால், அதை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கு ஆன ஆலோசனை கூட்டம், பிரதமர் மோடி தலைமையில்  நேற்று டெல்லியில் நடந்தது.

இது தொடர்பாக, பிரதமர் அலுவலகம் நேற்று  வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியுள்ளதாவது: இந்தக் கூட்டத்தில், பிரதமர் மோடி, நான்கு முக்கிய திட்டங்களை  முன் வைத்தார். முதலில், வைரசால் அதிகம் பதித்த அபாய  கட்டத்தில்  உள்ளவர்களை அடையாளம் காண வேண்டும். உதாரணத்துக்கு, டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோர்.

அடுத்ததாக,அனைவருக்கும் அணைத்து இடத்திலும் இந்த மருந்து கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் மூன்றாவதாக, அனைத்து தரப்பினரும் வாங்கும் விலையில் இந்த தடுப்பூசி இருக்க வேண்டும்.

மேலும் நான்காவதாக  நாட்டு மக்கள் அனைவருக்கும் சரியான நேரத்தில் சிறப்பான தடுப்பூசி போடுவது என்ற தேசத்தின் முயற்சிகளுக்கு முதுகெலும்பாக அமைந்திருக்கும் தொழில்நுட்ப வாய்ப்புகளை சரியாக ஆராய வேண்டும் என்று கூறிய பிரதமர் மோடி இத்தகைய பெரிய அளவிலான தடுப்பூசி நடவடிக்கைகளுக்கான விரிவான திட்டமிடலை உடனடியாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

 

 இந்த தகவல்கள் அனைத்தும் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

 

Prime Minister Modi's leadership held a meeting in Delhi yesterday to discuss if a vaccine against coronavirus could be found.