சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

ஆகஸ்ட் 15 முதல் கொரோனா தடுப்புஊசி பயன்பாட்டுக்கு வருகிறது

the-corona-vaccine-has-been-in-use-since-august-15
  அருண்   | Last Modified : 03 Jul, 2020 01:55 pm இந்தியா பொது

இந்தியாவில் புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி வெற்றிபெறும் பட்சத்தில் வரும் ஆகஸ்ட் -15  முதல் இந்த தடுப்பு மருந்தை சிகிச்சைக்கு  பயன்படுத்தலாம் என ஐசிஎமஆர் அறிவித்துள்ளது 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி பல உயிர்களை காவு வாங்கி கொண்டு இருக்கிறது இதனை தடுக்க உலகநாடுகள் அனைத்தும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் முழு மூச்சாக இறங்கியுள்ளன 

இந்த ஆராய்ச்சியின் பயனாக முதன் முதலாக  இந்தியாவில் இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கபட்டுள்ளது இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும்  தேசிய வைரலாஜி நிறுவனத்துடன் இணைந்து ஹைதராபாதில் உள்ள பாரத் பையோடெக் நிறுவனம் கோவாக்சின் என்ற  தடுப்பு ஊசியை கண்டுபிடித்துள்ளது. இதை மனிதர்களுக்கு சோதனை செய்ய இந்திய மருந்துகள் தர கட்டுப்பாடு அமைப்பு அண்மையில்  அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில் ICMR   டீ. ஜீ பல்ராம் பார்கவா பாரத் பையோடெக் மற்றும் மருத்துவ கல்லூரிகளின் முதன்மை ஆயிவாளருக்கு கடிதம் எழுதியுள்ளார் 

அதில் ஜூலை 7 ஆம் தேதிக்கு மேல் தொடங்கும் சோதனை வெற்றி பெரும் பட்சத்தில் அந்த தடுப்பு மருந்தை  கொரோனா சிகிச்சைக்கு வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் பயன்படுத்தலாம் என கூறியுள்ளார் 

மேலும் BBV152  இந்தியாவால் கண்டுபிடிக்கப்பட்ட முதல்  தடுப்பு மருந்து ஆகும்.இது ICMR - தேசிய வைரலாஜி நிறுவனத்தால் தனிமைப்படுத்தப்பட்ட sars -covid-2  லிருந்து  உருவாக்கப்பட்டுள்ளது தடுப்பூசிகளின்மருத்துவ பரிசோதனைகளை கண்காணிக்க 12 மருத்துவ நிறுவனங்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார் 

ICMR has announced that the vaccine could be used to treat the newly discovered coronavirus vaccine in India from August 15.