சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

பப்ஜி விளையாட்டால் 16 லட்சம் இழந்த குடும்பம்

பப்ஜி என்னும் விளையாட்டு செயலி நிறைய குழந்தைகள் ,சிறுவர்கள் ,இளைஞர்கள் என அனைத்து வயதினரையும் கவர்ந்து,  அவர்களை அதிலே மூழ்க வைத்துள்ளது. இதில் தனியாக விளையாடுவது மட்டும் இல்லாமல் தன்னுடன் குழு சேர்த்தும் விளையாடலாம் என்பதால் எல்லோரும் இதை விளையாட துடித்து பதிவிறக்கம் செய்ய வைத்துள்ளது.

பஞ்சாப் நகரில் ஒரு 17 வயது சிறுவன் தன் தாயிடம் ஆன்லைனில் படிப்பதாக கூறி அவரின் கைபேசியை உபயோகித்து வந்துள்ளான்.
    வெகு நேரம் கைபேசி உபயோகிக்கும் மகனை கண்டு தந்தை விசாரிக்க ஆன்லைனில் படிப்பதாக கூறியுள்ளான்.  எதார்த்தமாக தந்தை அவரின் வங்கி கணக்கை பார்க்கும் போது தன் வங்கி கணக்கில் இருந்து 16 லட்சம் ரூபாய் காணவில்லை என்று அறிந்து அதிர்ந்தார்.

 மகனை விசாரித்த தந்தைக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை தந்ததது.  மகன் அம்மாவின் கைப்பேசியில் பப்ஜி விளையாடியிருக்கிறான். அதில் அவனின் மொத்த குழுவிற்க்கும் அடுத்த அடுத்து நிலைக்கு செல்லவும்,  அடுத்த அடுத்து மேம்படுத்துவதற்காகவும் பணம் செலுத்தியதாகவும்,  வங்கியில் இருந்து வரும் குறுந்தகவலை பெற்றோர் பார்க்கும் முன் தான் அழித்துவிட்டதாகவும் தெரிவித்தான்.

3 வங்கி கணக்கில் பெற்றோர் பல வருடங்களாக சேமித்த 16 லட்சம் ரூபாயும் இப்படி மகன் செய்த செயலால் போனதே என்று பதறிய பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.  கைபேசி விளையாட்டுகளில் விட்ட பணம் திரும்ப பெறுவது என்பது கடினம் என்று தெரித்துவித்தனர் காவலர்கள்.  பெறும் கலங்கத்தில் குடும்பம் மூழ்கியது.உள்ளங்கையில் மூளையையும் மனதையும் பாதிக்கும் ஸ்மார்ட் கைபேசியை குழந்தைகளிடம் கொடுத்துவிட்டு பல சிக்கல்களில் சிக்கி கொள்கிறார்கள் பெற்றோர்கள். ஆன்லைன் வகுப்பாக இருந்தாலும் பெற்றோர் கண்காணிப்பு அவசியமானது என்பதை அறிந்து பெற்றோர்கள் செயல் பட வேண்டும்.

Pubg is a Android phone game application, in that a 17 year old boy paid 16 lakhs from his fathers bank account