சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

யார் இந்த விகாஸ் துபே?ஏன் சுட்டு கொல்லப்பட்டார் ?

விகாஸ் துபே  கான்பூர் மாவட்டத்தில் உள்ள ஷிவ்லி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிகாரு கிராமத்தை சேர்ந்தவர் 

அந்த கிராமத்தில் உள்ள விகாஸ் துபேயின் வீட்டுக்கு யாரும் அந்த வீட்டாரின் அனுமதியின்றி  உள்ளே செல்ல முடியாது என்றும், அவரின் வீடு ஒரு கோட்டை போல பராமரிக்கப்படுவதாகவும் உள்ளூர்வாசிகள் கூறினார்.

விகாஸின் தந்தை ஒரு விவசாயி என்றும், அவரின் மூன்று மகன்களில் விகாஸ் துபே மூத்தவர் என்றும் கூறிய கிராம மக்கள் , விகாஸ் துபேயின் மனைவி ரிச்சா துபே தற்போது மாவட்ட பஞ்சாயத்து அமைப்பின் உறுப்பினராக இருப்பதாக 
கூறினார்.

விகாஸ் துபேயின் இரண்டு மகன்களில், ஒருவர் வெளிநாட்டில் மருத்துவ கல்வி பயில்வதாகவும், மற்றவர் கான்பூரில் படிப்பதாகவும் கிராமவாசிகள் .

கான்பூரில் எட்டு காவல்துறையின சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் நேற்று (ஜூலை 9) மத்தியப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியாக கருதப்படும் விகாஸ் துபே இன்று (வெள்ளிக்கிழமை) காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கான்பூரில் உள்ள சவுபிபூர் காவல் நிலையத்தில் விகாஸ் துபே மீது கிட்டத்தட்ட 60 வழக்குகள் உள்ளன. அதில்  கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட மிகவும் முக்கிய வழக்குகளும் இதில் அடக்கம்.

அவர் பல முறைகள் கைது செய்யப்பட்ட போதிலும், இதுவரை அவர் எந்த வழக்கிலும் தண்டிக்கப்படவில்லை.

கான்பூரை சேர்ந்த பத்திரிகையாளர் பிரவீன் மோத்தா கூறுகையில், ''2001-ஆம் ஆண்டில் ஒருமுறை காவல் நிலையத்தில் விகாஸ் துபே அத்துமீறி நுழைந்ததாகவும், அப்போது  பாஜகவை சேர்ந்த சந்தோஷ் சுக்லா என்ற தலைவரை கொலை செய்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. சந்தோஷ் சுக்லா செல்வாக்கு மிக்க அரசியல்வாதியாக இருந்த போதிலும் விகாஸ் துபேக்கு எதிராக பயந்து எந்த போலீசாரும் சாட்சியம் அளிக்க முன் வரவில்லை. நீதிமன்றத்தில் யாரும் சாட்சியம் அளிக்காததால் விகாஸ் துபே விடுதலையானார்'' என்று அவர் கூறினார் .இதனை தவிர 2000, 2004 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் நடந்த கொலைகளிலும் இவர் மீது குற்றம்சுமத்தப்பட்டது .

 மேலும்  60 குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றப்பின்னணி உடைய விகாஸ் துபேயை கைது செய்ய கடந்த 3ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே நடந்த முயற்சியின்போது குற்றவாளி தரப்பினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஒருவர் உள்பட எட்டு காவல்துறையினர் உயிரிழந்தனர்.

பல காவல் துறையினரும் இந்த சம்பவத்தில் காயமடைந்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் எட்டு காவல்துறையினர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் அந்த மாநில காவல்துறையினரால் தீவிரமாக தேடப்பட்டு வந்த விகாஸ் துபே ஜூலை 9 ஆம் தேதி  மத்திய பிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.

மத்தியப்பிரதேசத்தில் பிடிபட்ட விகாஸ் துபேயை உத்தரப்பிரதேசத்தின் சிறப்பு காவல் படையினர் கான்பூருக்கு சாலை மார்க்கமாக அழைத்துச்சென்று கொண்டிருந்தபோது வாகனம் தலைக்குப்புற கவிழ்ந்ததாகவும் அப்போது அங்கிருந்து தப்பிடயோட முயற்சித்த விகாஸ் துபே மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவர் பலியானதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது .

மேலும்  இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மேற்கு கான்பூர் காவல்துறை கண்காணிப்பாளர், "கார் கவிழ்ந்ததும் விகாஸ் துபே அங்கிருந்து தப்பித்து ஓடுவதற்கு முயற்சித்தார்.அப்போது   அவரை பிடிப்பதற்கு காவல்துறையினர் மேற்கொண்ட முயற்சியின்போது அதிகாரி ஒருவரிடமிருந்து துப்பாக்கியை பறித்த விகாஸ் அவர்களை நோக்கி சுடத் தொடங்கினார். இதைத்தொடர்ந்து அங்கிருந்த மற்ற காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த விகாஸ் துபே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்" என்று கூறினார் 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விகாஸ் துபே உயிரிழந்துவிட்டதை உறுதிசெய்துள்ள உத்தரப்பிரதேச மாநில காவல்துறையின் ஏ.டி.ஜி.பி. பிரசாந்த் குமார் இதுதொடர்பாக விரிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், தப்பியோட முயற்சித்த விகாஸ் துபேயை பிடிக்க முயற்சித்ததில் நான்கு காவல்துறையினர் காயமடைந்ததாக கூறும் கான்பூர் காவல்துறையினரின் ஐஜி மொகித் அகர்வால், இறுதியில் விகாஸ் துபே காவல்துறையினரால் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

Kanpur police IG Mohit Agarwal, who claimed that four policemen were injured in the attempt to capture Vikas Dubey who tried to escape, said Vikas was eventually killed by Dubey police.