சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

கான்பூர் விகாஸ் துபே என்கவுண்டர் - சேலம் மாவட்டம் கொளத்தூர் லக்கம்பட்டிக்கு பெருமை சேர்த்த IPS தினேஷ் குமார்

போலீஸாரால் தேடப்பட்டு பிடிபட்ட உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பிரபல ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் தலைமை வகித்தவர் தமிழகத்தை சேர்ந்த IPS தினேஷ்குமார் .அவரின் செயலை கண்டு அவரது பெற்றோர்கள் மிகவும் நெகிழ்ச்சி  அடைந்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் ஒரு டி.எஸ் .பி உள்பட 8  போலீசாரை சுட்டு கொன்ற ரவுடி விகாஸ் துபே வை நேற்று எஸ்.எஸ் .பி .தினேஷ்குமார் தலைமையிலான போலீஸார் என்கவுண்டர் செய்தனர்.

யார் இந்த எஸ். எஸ் .பி. தினேஷ்குமார் : தமிழ் நாட்டில்  உள்ள சேலம் மாவட்டம் கொளத்தூர் லக்கம்பட்டி ஊராட்சி  சின்னதான்டாவை சேர்ந்த விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.இவரது தந்தை பிரபு விவசாயி (63 ) தாயார் சுபத்ரா (54 ) இவர்களின் ஒரே மகன் தன தினேஷ் குமார்(33 ). 

இவர் தனது பள்ளி படிப்பை செயின்ட் மேரிஸ் மற்றும்  சேலம் ஈங்கூரில் கங்கா மெட்ரிக் பள்ளிகளில் முடித்தார். மேலும் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் BSC முடித்து சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினார்.  

கடந்த 2009 இல் IPS ஆன இவர் தற்போது உத்தரபிரதேசம் கான்பூர் மாவட்ட எஸ்.எஸ்.பி(சிறப்பு  காவல் கண்காணிப்பாளர் ) ஆக உள்ளார்.இவருக்கு திருமணமாகி அனுஷ் கார்த்திக் என்ற மகன் உள்ளார்.

தினேஷ் குமார் தலைமையில் நடந்த என்கவுண்டர் குறித்து அவரது பெற்றோர்கள் கூறுகையில் விவசாயம் செய்து தான் எங்கள் மகனை படிக்கச் வைத்தோம் எங்கள் மகன் சிறுவயது முதலே நேர்மையாகவே இருப்பான்.

போலீஸார் சுட்டு கொன்ற ரவுடியை எங்கள் மகன் தலைமையில் சுட்டு கொன்றது எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது என்றும் மேலும் மற்றொரு  மாநிலத்திற்கு சென்று சிறப்பாக பணியாற்றி தமிழகத்துக்கு பெருமை சேர்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கூறினார்கள் 

Rowdy Vikas Dube, who shot dead eight policemen, including a DSP, in Kanpur, Uttar Pradesh, was encountered by SSP Dinesh Kumar-led police yesterday.