சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் கொரோனா எதிர்ப்பு மருந்து சோதனையை தொடங்கியது

பல்வேறு நாடுகளில் கொரானா எதிர்ப்பு மருந்து பரிசோதனை செய்து வரும் நிலையில் இந்தியாவிலும் முதற்கட்ட பரிசோதனை ஆரம்பம் ஆகிவிட்டது.

இந்தியாவில் கண்டுபிடித்த தடுப்பு மருந்தின் பெயர்  " கோவாக்ஸின்"  ஆகும்.  இந்தியாவில் மனிதர்கள் மீது செலுத்தி சோதனை செய்ய பாட்னா,  ஹரியானா,  ஹைதராபாத்,  தமிழ்நாடு என 4  மாநிலத்தில் 4 மருத்துவமனைக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.  
அதில் தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனையான் எஸ். ஆர். எம் நிறுவனம் ஒன்று ஆகும். 

இன்று இந்த 4 மருத்துவமனையிலும் மனிதர்கள் மீது மருந்து செலுத்தி முதற்கட்ட பரிசோதனை ஆரம்பித்து விட்டார்கள்.  இந்த சோதனையின் முடிவு 14 நாட்களில் தெரியவரும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.  அதன் பின் பல பரிசோதனைகள் நடத்தப்படும் என்று தகவல் வந்துள்ளது.

ஹைதராபாத்தில் பாரத் பையோ டெக் என்னும் தமிழர் ஒருவர் நடத்தி வரும் நிறுவனம் இந்த மருந்தை கண்டுபிடிக்கப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கொரோனா தடுப்பு மருந்து தன்னார்வாளர்களுக்கு முதற்கட்ட பரிசோதனை தொடங்கியுள்ளது 14 நாட்களுக்கு பின் இரண்டாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தகவல் வந்துள்ளது. 

கொரோனாவில் உலகமே அதிர்ந்து தவித்திருக்கும் நிலையில் பல்வேறு நாடுகளில் கொரானா எதிர்ப்பு மருந்து தயாரித்து சோதனை செய்து வரும் நேரத்தில் இந்தியாவில் தயாரித்து சோதனை மேற்க்கொள்ளப்பட்ட தகவல் மக்களிடையே நம்பிக்கை பரவி வருவதை காண முடிகிறது.

India founded a vaccine for covid-19