சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

முதல்முறையாக முதல்வரை தாக்கிய கொரோனா

மத்தியப்பிரதேச முதல்வர்சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காட்டு தீ போல்  பரவி வருகிறது. கொரோனா பாதிப்பு இந்தியாவில்  ஒவ்வொரு நாளும் ஒரு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து, 3-வது இடத்தில் உள்ளது.

உலக முழுவதும்  கொரோனாவிற்கு தடுப்பூசி தயாரிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன . கொரோனாவை தடுக்க உருவாக்கப்பட்டுள்ள கோவாக்சின் என்ற  மருந்தை சுதந்திர தினமான ஆகஸ்ட்  15ம் தேதி செயல்பாட்டிற்கு கொண்டு வர இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முடிவு செய்துள்ளது. இதற்கிடையே, இந்தியாவில் கொரோனா பாதிப்பிற்கு ஏற்றவாறு மாநிலங்கள் ஊரடங்கை நீட்டித்தும் தளர்த்தியும் நடவடிக்கை எடுத்து  வருகிறது.

இந்த சூழ்நிலையில் , மத்தியப்பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் சவுராஜ் சிங் சவுகான், என் அன்பான நாட்டு மக்களே,  எனக்கு கொரோனா அறிகுறிகளைக் கொண்டிருந்தேன், பரிசோதனைக்குப் பிறகு எனக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது . என்னுடன்  தொடர்பு கொண்டு இருந்தவர்கள் கொரோனா பரிசோதனையைச் செய்யுங்கள் என்று தனது  சக  ஊழியர்கள் அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். எனக்கு கொரோனா உறுதியான நிலையில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் பதிவிட்டுள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் இதுவரை 26,210 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 791 பேர் உயிரிழந்த நிலையில், 17,866 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 7553 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Madhya Pradesh Chief Minister Sauraj Singh Chauhan has been confirmed to have a corona infection. Corona damage is spreading like wildfire across the country. Corona vulnerability is reaching a new peak every day in India. Globally, India ranks 3rd in corona impact.