சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

இப்படி கூட மகன்களுக்கு பெயர் வைக்க முடியுமா ?

அமெரிக்காவில் கூட கேமரா போன்ற அமைப்பில் கட்டப்பட்ட வீடு அருங்காட்சியமாக உள்ளது .ஆனால் இந்தியாவில்  இப்படி கூட வீடு கட்ட முடியுமா என்ற புதுமையை உருவாக்கியுள்ளார் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவர் .அது  கேமரா போன்று அமைப்பு உடைய வீடு .அவர் அவருடைய சொந்த வீட்டை கேமரா போன்று கட்டமைத்துள்ளார்.

ரவி ஹொங்கள் என்பவர் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் .இவர் ஒரு  தொழில்முறை புகைப்படக்காரர் ஆவார்.அவர் தன்னுடைய புகைப்பட கருவி மீது கொண்ட காதலை வெளிப்படுத்த புகைப்பட கருவி போன்றே வீட்டையும் உருவாக்கியுள்ளார் .

இதில் மற்றொரு புதுமை என்னவென்றால் , தன்னுடைய மூன்று மகன்களின் பெயரை கேனான் (canon),நிகான் ( Nikon ),மற்றும் எப்சன் (Epson )என்றும் பெயர் வைத்தது தான் ஆச்சர்யம் .
இந்த வீட்டை 71 லக்ஷத்தில் இல் உருவாக்கியுள்ளார் .  இந்த வீட்டிற்கு கிளிக் (click )என்று பெயரிட்டும் உள்ளார் .

முதல் தளம்  எப்சன் பிரிண்டர் (Epson  Printer )போன்று வடிவமைத்துள்ளார் .

camera-house

இரண்டாவது தளம்  நிகான் கேமரா (nikon  camera )போன்ற வடிவமுடையது. 

மூன்றாவது தளம்  கேனான் கேமரா (canon  camera )போன்றும்  வடிமைத்துள்ளார் .

இந்த மூன்று தளங்களும் மூன்று மகன்கள் பெயரை கொண்டது .இந்த தளங்கள் லென்ஸ்(lens ) ,மெமரி கார்டு (memory  card  )மற்றும் ஷோ ரீல் (show reel )போன்ற வெளிப்புற தோற்றத்தையும் ,
உட்புற வடிவமைப்பில் கேமராவின் உட்புற  பகுதிகளும் அடங்கும்.இவர் இவருடைய கனவு இல்லத்தை உருவாக்க இரண்டு அரை வருடங்கள் தேவைப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் .

A person from the state of Karnataka has created an innovation that can build a house like camera