கொல்கத்தாவில் பிரிட்டிஷ் துணை தூதரகத்தில், தூதரக மேம்பாட்டு அதிகாரியாக பணிபுரிபவர் , சஞ்சிபிதா மெக்டொனால்ட் தாரியாங் சென் வயது (45), ஊரடங்கின் போது, இந்தியாவில் 11 நகரங்களிலிருந்து, 66 விமானங்கள் மூலம், 18 ஆயிரம் இங்கிலாந்து மக்கள், தாயகம் செல்லும் பணியை மேற்கொண்டார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை கடந்த 24ம் தேதி பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடன் வீடியோ கான்பரன்சிங் கால் வழியாக உரையாட உலகெங்கும் 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் சஞ்சிபிதாவும் ஒருவர் .
வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசிய பிரிட்டன் ராணியிடம், நாடெங்கும் சிக்கித் தவிக்கும் பிரிட்டிஷ் பயணிகளை வீட்டிற்கு வர உதவிய தனது அனுபவத்தை சஞ்சிபிதா கூறினார்
இதுகுறித்து 'ராணியிடமிருந்து அழைப்பு வருவதற்கு முன் நான் மிகவும் பதற்றத்துடன் இருந்தேன். ஆனால் அவர் நான் பயந்தது போல் இல்லாமல் , அழகாகவும், பணிவாகவும்,பண்பாகவும் நடந்துகொண்டார். அது எனக்கு நிம்மதியை தந்தது. பல ஆண்டுகளாக எனக்குத் நன்கு தெரிந்த ஒருவரிடம் நான் பேசுவதாக உணர்ந்தேன்' எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ கான்பரன்சிங் அழைப்பு, சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது எனவும் கூறினார்
மேலும் அவர் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடன் பேசியதன் மூலம் 'கனவு நனவாகியது எனவும் தூதர அதிகாரி சஞ்சிபிதா மெக்டொனால்ட் தாரியாங் சென் கூறினார்.
"My dream came true when I spoke with Queen Elizabeth II of Britain," said Sanjipitha McDonald Tariang Sen, the embassy official.