சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

தேசிய கல்விக் கொள்கை மாற்றம் என்ன?கல்விக் கொள்கையின் சிறப்பு என்ன

34 ஆண்டுகளுக்கு பிறகு உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை அனைத்து பள்ளி கல்வியில் உலகளாவிய அணுகுமுறையை உறுதி செய்து  மழலையர் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை, அனைத்து பள்ளிக் கல்விக்கு உலகளாவிய அணுகுமுறையை உறுதி செய்யவேண்டும் என்பதை   தேசிய கல்விக் கொள்கை 2020  அறிவுறுத்துகிறது .

தேசிய கல்விக் கொள்கை 2020 படி  கட்டமைப்பு வசதி, ஆராய்ச்சிக்கான கல்வி மற்றும் மையங்கள், பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, மாணவர்களையும், அவர்களது படிப்புத் திறனையும் தொடர்ந்து கண்காணிபது , முறைசார்ந்த மற்றும் முறைசாரா கல்வி முறைகளை கொண்ட கல்விகளை மேம்பட வழி வகைகளை செய்து தருதல், மற்றும்  நன்கு பயிற்சி பெற்ற சமூகப் பணியளார்களை கொண்டு அதே பள்ளிகளிலேயே ஏற்படுத்தித் தருவது, 3, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு, தேசிய திறந்தவெளிப் பள்ளி மற்றும் மாநில திறந்தவெளிப் பள்ளிகள் வாயிலாக கல்வி கற்பிப்பது, அதனை தொடர்நது  10 மற்றும் 12ஆம் நிலைகளுக்கு இணையான இடைநிலைக் கல்வி பாடத் திட்டங்கள், தொழிற்கல்விப் பாடங்கள், முதியோர் கல்வி மற்றும் வாழ்க்கை மேம்பாட்டிற்கான திட்டங்கள் மூலமாக  இலக்கினை அடைவதற்கான இத்திட்டத்தில் ஆலோசனை வழங்கபட்டுள்ளது.

 

மேலும் மாணவர்கள் மாணவியர்கள் தங்கள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிட்ட சுமார் 2 கோடி குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கவும் தேசிய கல்விக் கொள்கை 2020 இல் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

Ensuring a Global Approach to All School Education The National Education Policy 2020 advises on ensuring a global approach to all school education, from kindergarten to secondary education