சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

மத்திய மந்திரி அமித் ஷாக்கு கொரோன தொற்று உறுதி: மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

இந்தியாவில் கோரோனோ வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது.இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கோரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.இந்தியா முழுவதும் அமைச்சர்கள்,எம் எல் ஏ க்கள் மற்றும் மாநில முதல்வர்கள் என பலரும் பாதிக்க பட்ட நிலையில் உள்ளனர்.இதில் மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சவுகான் கோரோனோவால் பாதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் இதுவரை இந்தியாவில் 17 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கோரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 37 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 11 லட்சம் பேர் கோரோனோவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதில் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா,ஒடிஷா,அசாம் ,உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் கோரோனோ தொற்று எற்பட்டு மீண்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சில அமைச்சர்,எம் எல் ஏ க்கள் மட்டும் உயிர் இழந்துஉள்ளனர். கேபினட் அமைச்சர் கமல் ராணி இன்று கோரோனோவால் உயிரிழந்தார்.

 இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

— Amit Shah (@AmitShah) August 2, 2020

 

 இதன் அடிப்படையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டரில்  ''கோரோனோ வைரஸ் பாதிப்புக்கான லேசான அறிகுறிகள் எனக்கு இருந்தன. இதையடுத்து, நான் கோரோனோ வைரஸ் பரிசோதனை மேற்கொண்டபோது, எனக்குக் கோரோனோ வைரஸ் தொற்று இருப்பது மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டது."

இதுபோன்று பல தலைவர்கள் மற்றும் பிரபலங்கள்  கோரோனோ வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுஇருப்பது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது .


 

Union Minister Amit Shah has been admitted to hospital for treatment of a coronavirus infection.