சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

வரலாறு பாதையில் ராமர் கோவில்! அயோத்தியில் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா !

வரலாற்று சிறப்புக்கு தயாராகிறது அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நாளை (05 /08 /2020 ) அடிக்கல் நாட்டு விழா பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தை தொடர்ந்து அங்கு உலகின் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட உள்ளது.

சுமார் 1850 களில் தொடங்கிய சட்ட போராட்டத்தின் வெற்றி தற்போது செயல் வடிவம் பெற தொடங்கி உள்ளது. ராமர் பிறந்த மண் எனப்படும் அயோத்தியில் கோவில் கட்டும் பணி நாளை தொடங்க உள்ளது.1990-ம் ஆண்டு ராமர் கோயில் கட்டுவதற்காக பாஜக நடத்திய இயக்கத்தை முன்னெடுத்தவர் அப்போதைய தலைவர் அத்வானி. சோம்நாத் முதல் அயோத்தி வரை அவர் நடத்திய ரத யாத்திரை ராமர் கோயிலுக்காக பாஜக நடத்திய இயக்கத்தில் முக்கிய இடத்தை பிடித்தது.

இந்நிலையில் ராமபிரான் பிறந்த இடமான உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்டமான முறையில் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நாளை (புதன்கிழமை)(05 /08 /2020 ) நடக்கிறது. இதனை ஒட்டி பல்வேறு வழிபாடுகள்,சடங்குகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது.  
  
அயோத்தி நகரமே மலர் தோரணங்கள் மற்றும் வண்ண விளக்குகளால் விழாக்கோலம் கண்டுள்ளது. மேலும் ரயில்நிலையம்,பொது கட்டிடங்கள் வண்ணம் தீட்டப்பட்டு புதுபொலிவுடன்  காட்சி அளிக்கிறது.

ராமருக்கு கோயில் கட்ட அனுமனிடம் அனுமதி பெற வேண்டும் என்பது ஐதீகம். அதன் ஒருப்பகுதியாக அயோத்தியில் உள்ள 1,700 ஆண்டுகள் பழமை வாய்ந்த அனுமன் கோயிலில், தென் இந்தியா,டெல்லி,ஹரித்துவார்,வாரணாசி ஆகிய நகரங்களில் இருந்து வேத விற்பன்னர்கள்,பண்டிதர்கள் வரவழைக்கப்பட்டு  நிஷான் பூஜை நடைபெற்றது.

ராமர் கோவில் கட்டும் போது அவரது உறவுகளும் தளபதிகளும் அதில் இடம் பெற வேண்டியது அவசியமானது. இதற்காக சக தெய்வங்களையும் உறவுகளையும், தளபதிகளையும் அழைக்கும் நோக்கில் 4 கட்டங்களாக யாகங்கள் நடைபெற்றன. 

இந்த பூஜைக்கு பெயர் ராம் சரண் பூஜை. இந்த பூஜையில் சிவன், பார்வதி, விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களை அழைக்கும் நோக்கில் முதல்கட்ட யாகமும், ராமரின் படைத்தளபதிகளாக விளங்கிய நலன், நீலன், சுக்ரீவனை அழைக்கும் நோக்கில் 2ம் கட்டயாகமும் நடைபெற்றன.

மூன்றாவது கட்ட யாகமானது தசரதரையும், அவரது மனைவிகளையும் அழைக்கும் நோக்கிலும், நான்காவதாக கட்ட யாகம் ராமரின் சகோதரர்கள், அவர்களது மனைவிகள், ஆஞ்சநேயர் உள்ளிட்டோரை அழைக்கும் நோக்கிலும் நடைபெற்றன. மற்றொரு முக்கிய சடங்காக அயோத்தியில் உள்ள சரயு நதிக்கு ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

இதன் தொடர்ச்சியாக நாளை பிற்பகல்  12.30 மணிக்கு பூமி பூஜையானது தொடங்க உள்ளது. அதனை தொடர்ந்து பிற்பகல் 12.40 மணிக்கு ராமர் கோவிலுக்கான  அடிக்கல் பிரதமர் மோடி அவர்களால்  நாட்டப்படுகிறது. இந்த நிகழ்விற்காக 200 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விழா மேடையில் பிரதமர் உள்பட 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் பட்டேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மற்றும் ராமர் கோயில் கட்டுமான  அறக்கட்டளையின் தலைவர் மகந்த் கோபால் தாஸ் ஆகியோருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  குழந்தை ராமரின் சிலையும் மேடையில் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் ராமர் கோயில் பூமி பூஜைக்காக தமிழ்நாட்டின்  சேலத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட  17.4 கிலோ எடை வெள்ளி செங்கல்  ராமர் கோயில் பூமி பூஜைக்காக சேலத்தில் இருந்து அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக சேலம் மரவனேரியில் வெள்ளி செங்கலுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அயோத்தி நகரம் முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் கடும் சோதனைக்கு பின்னரே மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வரும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், வழிகாட்டுமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. 

Ramar Temple Inner view

அதன்படி பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவின் போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், விழாவில் பங்கு பெறுபவர்கள் செல்பி எடுக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு இருக்கைகளுக்கும் இடையில் குறைந்தபட்சம் 8 அடி இடைவெளி இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Ramar Temple outer view

அதே போன்று கோயில் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளவர் உட்பட அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு, அனைவரும் முகக்கவசம் அணிவதை கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட ஏற்பாடுகளுடன் அதே வேளையில் பாதுகாப்பு அம்சங்களுடன் நடைபெறும் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா உலகம் முழுவதும் உள்ள ராம பக்தர்கள் இடையே ஆனந்தத்தை ஏற்படுத்தி உள்ளது.  மேலும் அடிக்கல் நாட்டு விழா மற்றும்  பூமி பூஜை நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

Ramar Temple over view

Prime Minister Narendra Modi will lay the foundation stone of the Ayodhya Ram Temple Bhoomi Puja tomorrow