சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225

சீனாவின் வூகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் காரணமாக உலகநாடுகள் அனைத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன, இந்த வைரஸ் ஐ  அழிப்பதற்க்காக, உலகநாடுகள் அனைத்தும் போராடுகின்றன 

இந்த வைரஸ் பரவாமல் இருக்க அணைத்து உலகநாடுகளும் போட்டி போட்டு கொண்டு அதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன,அதற்கான ஆராய்ச்சிகளிலும் நடந்துகொண்டிருக்கிறது .இந்தசூழ்நிலையில் இந்தியாவில் இரண்டு தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன அவை யத்தனில் ஆமதாபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி,  மற்றும் ஐதராபாத்தை தலைமையகமாக கொண்டு இயங்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தாரின் கோவேக்சின் ஆகும்.

மற்றொரு தடுப்பூசியானது  இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும்  அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்துடன் இணைந்து உருவாகியுள்ளது,இதுப இந்தியாவில் கோவிஷீல்டு என்று அழைக்கப்படுகிறது.இந்த  தடுப்பூசியின் 2-வது மற்றும் 3-வது கட்ட சோதனைகளை புனேயை சேர்ந்த இந்திய சீரம் இன்ஸ்டிடியுட் அடுத்த சில நாட்களில் நடத்த உள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட 1,600 பேருக்கு 17 இடங்களில் இந்த தடுப்பூசி போட்டு சோதிக்கப்பட்டு உள்ளது..

இதை பரிசோதித்த பின் இந்த தடுப்பூசி மருந்து தயாரிப்புக்கானது அக்டோபர் மதம் துவங்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது 

மேலும்  2021-ஆம் தொடக்க மாதம்  இந்தியாவில் வசிக்கும் பத்து கோடி மக்களுக்கு இந்த  தடுப்பு மருந்து கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும், உலக வங்கியால் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் (LMIC) கொண்ட நாடுகளாக வரையறுக்கப்பட்ட நாடுகளுக்கு, தடுப்பூசியின் விலையை 3 டாலர்கள் அதாவது இந்தியா ருபாய் மதிப்பில் ரூ.225 க்கு அளவில் விலை நிர்ணயம் செய்யும் பணி மேற்கொள்வதாக  சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.

It is expected that the production of this vaccine will start in October