கேரள மாநிலம் கோழிக்கோடில் துபையில் இருந்து190 பேருடன் ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம், தரையிறங்கும்போது விபத்துக்குள்ளான சம்பவத்தில் இரு விமானிகள் உள்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கால் காரணமாக வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள 'வந்தே பாரத்' திட்டத்தின்கீழ் அழைத்து வர சிறப்பு விமானங்களை மத்திய அரசு இயக்கி வருகிறது. இந்த திட்டத்தின்கீழ், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் போயிங் விமானம் இந்தியாவின் கேரளாவில் மலப்புரம் மாவட்டம், கோழிக்கோடு அருகே உள்ள கரிப்பூர் விமான நிலையத்தில்,191 நபர்களுடன் இந்த விமானம் நேற்று இரவு, 7:40 மணிக்கு தரையிறங்கியது; அப்போது, கோழிக்கோட்டில் பலத்த மழை பெய்தது. இதனால், இந்த விமானம் தரையிறங்கியபோது, ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்று, அருகில் இருந்த, 35 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து, இரண்டாக உடைந்து விபத்துக்குள்ளானது.
மேலும் இந்த விபத்தில், விமான பைலட், ஒரு குழந்தை உட்பட, 16 பேர் உயிரிழந்துள்ளதாக, முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்தின் இடிபாடுகளில் இருந்து, 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இதில், சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
Pained by the plane accident in Kozhikode. My thoughts are with those who lost their loved ones. May the injured recover at the earliest. Spoke to Kerala CM @vijayanpinarayi Ji regarding the situation. Authorities are at the spot, providing all assistance to the affected.
மேலும் இது குறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
கோழிக்கோடு விமான விபத்தை தான் அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். தன் அன்புக்குரியவர்களை இழந்தவர்களை எண்ணி, என் மனம் வருந்துகிறது. மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்றும் களத்தில் அதிகாரிகள் நிற்கிறார்கள் மீட்பு பணிகள் விரைவாக நடக்கின்றன. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குகிறார்கள்.என்று பதிவிட்டுள்ளார்
18 people, including two pilots, were killed when an Air India passenger plane carrying 190 people from Dubai crashed in Kozhikode, Kerala.