சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

ஆந்திரா பிரபல ஹோட்டலில் தீ விபத்து ! 9 பேர் வரை உயிரிழப்பு!

ஆந்திராவில் பிரபல ஹோட்டல் தற்போது கொரோனா  வைரஸ் காரணமாக 
தற்காலிக கொரோனா  சிகிச்சை மையமாக செயல்பட்டு வந்தது. இதில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் 9 பேர் வரை உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் செயல்பட்டு வரும் ஹோட்டல் ஸ்வர்ண பேலஸ் மற்றும் ரமேஷ் ஹாஸ்பிடல் சேர்ந்து  தற்போது கொரோனா   நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டது பின்னர் தீயணைப்பு துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து வெகு நேர  போராட்டத்துக்கு பின்னர்  தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் 9 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் படுகாயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளனர் என்றும் தகல்வல்கள் தெரிவிக்கின்றன.

  இது குறித்து தீயணைப்பு துறை அதிகாரி தெரிவிக்கும் போது சிறிய மின் கசிவுனால் ஏற்பட்ட தீ தரை தளத்தில் ஏற்பட்டு பின்னர் மலமலவென  அடுத்தடுத்த மாடிகளுக்கு வேகமாக தீ பரவியிருக்கலாம் என்று தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து தொடர்பாக அம்மாநில முதல்வர் திரு.ஜெகன் மோகன் ரெட்டி இந்த தீவிபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவுத்திட்டுள்ளதாகவும் மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பிரதமர் திரு.நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.


Anguished by the fire at a Covid Centre in Vijayawada. My thoughts are with those who have lost their loved ones. I pray that the injured recover as soon as possible. Discussed the prevailing situation with AP CM @ysjagan Ji and assured all possible support.

 


 

Hotel fire at Corona treatment center in Andhra Pradesh; Up to 9 people were killed!