சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

கடல் தாண்டி கால் பதித்த ஏர்டெல் 4g நிறுவனம்

முதன் முதலாக ஏர்டெல் கடல் தாண்டி தீவுகளில் அதிவேக 4g  சேவைகளை வழங்கும் முதல்  தனியார் தொலை தொடர்பு சாதனமாக உருவெடுத்துள்ளது.

இந்தியா பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,சென்னை, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை இணைக்கும் கடல் வழி கேபிள் திட்டத்தை இன்று அறிமுகம் செய்து வைத்தார்,மேலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 4g சேவைகளை அதிகரிக்க செய்யும்  திட்டமாக  இது  உள்ளது.மேலும் இந்த திட்டத்தின் மதிப்பு ரூ 1 ,224 கோடி  என்பது குறிப்பிடத்தக்கது,

இந்த புதிய ஃபைபர் இணைப்பு திட்டம் இந்தியாவின்  டிஜிட்டல் பயணத்தில் ஒரு முக்கிய அங்கமாக அமையும்,ஏனெனில் இந்த உள்கட்ட அமைப்பு அந்தமான் தீவில் அணைத்து பகுதிகளுக்கும் சென்றடையும் மேலும் இதை தொடங்க எங்களுக்காக நேரம் ஒதுக்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நங்கள் மிகவும் கடமைப்பட்டு இருக்கிறோம் என்று பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் நன்றி தெரிவித்தார்,

முதன் முதலாக அந்தமானில் மொபைல் சேவைகளை ஆரம்பித்தது முதல் ஏர்டெல் நிறுவனம் இன்று அல்ட்ரா பாஸ்ட் 4g ஐ அறிமுகப்படுத்தியதனால்  வடிக்கியாளர்களுடனான நெட்ஒர்க்  ஐ மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது airtel 4g

மேலும் இந்த திட்டம் அந்தமானில் உள்ள ஸ்வராஜ் டீப்,லாங் ஐலேண்ட்,ராங்காட் ,லிட்டில் அந்தமான்,காமோர்ட்டா ,கார் நிக்கோபார் ,மற்றும் கிரேட்டர் நிக்கோபார் ,ஆகிய 7 தீவுகளும் இணைக்கும் என அறிவித்துள்ளது. 

மேலும் பிரதமர் மோடி அவர்கள்  பேசும் போது  இந்த இணைப்பு திட்டமானது தேசிய பாதுகாப்பை மேம்படுத்தவும்,தீவுகளில் நெட்ஒர்க் இணைப்பை மேம்படுத்தவும் மேலும் மக்கள் ஆன்லைன் கல்வி,டெலிமெடிஸின்,மின்வணிகம் மேலும் இதன் வேகம் சுற்றுலாவை மேம்படுத்துவதோடு சுற்றுலா செல்லும் பயணிகளும் ஈர்க்கும்  இதனால் வேலைவாய்ப்பு பெருகும் என கூறினார்

மேலும் கேபிள் இணைப்பு பிஎஸ்என்எல் 4g சேவைகளை வழங்க அனுபதிப்பதோடு மட்டும் இல்லாமல் மற்ற தொலை தொடர்பு ஆப்ரேட்டர்களையும் தீவுகளில் இத்தகைய சேவைகளை வழங்க உதவும் என கூறினார் 

மேலும் இது போர்ட் பிளேர் வரை 400  gbps வேகமும் ,மற்ற தீவுகளில் 200 gbps  வேக இணையத்தை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது  

Indian Prime Minister Narendra Modi today unveiled the sea cable project connecting Chennai, Andaman and Nicobar Islands.