கொரோனா தடுப்பு நடவடிக்கையில்
மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் எல்லாரும் கடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஓய்வின்றி தொடர்ந்து பணியாற்றி கொண்டே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது. இதனால் அவர்கள் மன அழுத்தத்தை குறைக்க அவர்கள் அவ்வபோது இசைக்கு நடனம் ஆடி தங்களை தாங்களே உற்சாகம் செய்து, மன அழுத்தத்தை குறைத்து கொள்ளும் கானோலிகள் ஆங்காங்கே இணையத்தில் பரவி வருவதை காண்கிறோம்.
இப்போது வட மாநிலத்தில் ஒரு மருத்துவர் தான் தன்னுடைய மன அழுத்தத்தை மட்டும் போக்காமல் கொராணா நோயாளிகளின் மன அழுத்தத்தையும் போக்கி அவர்களை உற்சாகம் படுத்தும் வகையில் பாட்டுக்கு கொரோனா நோயாளிகள் முன்பு அவர் நடனம் ஆடியுள்ளார்.
அந்த கானோலி இணையத்தில் மிகவும் பரவலாகிக்கொண்டுள்ளது. பல நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.
Doctor danced for patients