சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

ஓய்வு அறிவித்த தல! சோகத்தில் ரசிகர்கள்!!

எம்.எஸ்.தோனி 1981 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பான் சிங், தேவகி தம்பதியினருக்கு  மகனாக பிறந்தார்.பின்னர் அங்குள்ள ஜவஹர் வித்யாலயாவில் தன் பள்ளிப்படிப்பை தொடங்கிய அவருக்கு விளையாட்டில் மிக ஆர்வம் கொண்டதால் தன் பள்ளியின் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தார். உள்ளூர் மற்றும் மாவட்ட அளவிலான தொடரில் பங்கேற்று சிறப்பாக விளையாடி பல பரிசுகளை பெற்று அசத்தியதால் பீகார் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.பின்னர் 2001 ஆம் ஆண்டு மத்திய அரசு வேலையான ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகர் வேலை அவரை தேடி வந்தது. 

பின்னர் 2004 ஆம் ஆண்டு இந்தியா ஏ அணியில் விக்கெட் கீப்பராக இருந்த தினேஷ்கார்த்திக்கு இந்தியா அணியில் இருந்து அழைப்பு வர எம்.எஸ்.தோனிக்கு இந்தியா ஏ அணியில் இடம் கிடைத்தது. தனது முதல் போட்டியிலேயே   ஜிம்பாப்வே 11 உடன் ஏழு கேட்ச் நான்கு ஸ்டம்பிங் என அசத்தியவர் எம்.எஸ்.தோனி. அடுத்ததாக பாகிஸ்தான் 11 உடனான போட்டியிலும் அசத்தியதால் இந்தியா கிரிக்கெட் அணியின் கவனம் இவர் பக்கம் திரும்பியது.

அடுத்தடுத்த போட்டியில் இவர் ரன் வேட்டை தொடர இவருக்கு 2006 ஆம் ஆண்டு சர்வதேச போட்டியில் முதல் இடம் பிடித்து அசத்தினார். 2007 ஆம் ஆண்டு இருபது ஓவர்  கிரிக்கெட் போட்டிக்கான உலக கோப்பை தொடர் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. சீனியர் வீரர்கள் ஒதுங்க பின்னர் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தோனியின் பெயரை சிபாரிசு செய்தார்.அதன் மூலம் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார். 

winning cup

பின்னர் தென் ஆப்ரிக்காவில் நடை பெற்ற இந்த தொடரில் தோனி  தலைமையில் களம்இறங்கிய இந்தியா அணி வெற்றி மேல் வெற்றிகளை குவித்தது. 2007 செப்டம்பர் 24 தேதி நடைபெற்ற இறுதி போட்டியில் நமது பரம எதிரியானா பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று உலக கோப்பையை வென்று தந்தார் தல தோனி. இதன் பிறகு 2007 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியின் கேப்டனாகவும் 2008 ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.

பின்னர் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிவாகை சூடி ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார்.2011 ஆம் ஆண்டு உலக கோப்பையை இந்தியா இலங்கை வங்கதேசம் சேர்ந்து நடத்தியது. பின்னர் 2003 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் தோல்விஅடைந்ததற்கு  பழி தீர்த்து  அரையிறுதியில் பாகிஸ்தானையும் துவம்சம் செய்து இறுதிப்போட்டிக்குள் மூன்றாவது முறையாக நுழைந்தது. பின்னர் இறுதி போட்டியில் இலங்கையுடன்  இந்தியா அணியின் சிறப்பான ஆட்டத்தால் குறிப்பாக யுவராஜ்,கம்பிர் மற்றும் கடைசியாக தோனி அடித்த சிக்ஸர் மூலம்  இந்திய அணி உலக கோப்பையை 1983 ஆம் ஆண்டிற்கு பிறகு வென்றது. அந்த  உலக கோப்பையை சச்சினுக்கு சமர்ப்பித்து மகிழ்ந்தார் தல தோனி.

 

முத்தரப்பு போட்டிகளிலும் தோனி ஒரு சிறந்த கேப்டனாக திகழ்ந்தார்.பின்னர் IPL ( Indian  Premier  League   ) எனப்படும் இருபது ஓவர் உள்ளூர் போட்டியில் சென்னை அணிக்காகவும் விளையாடினர் அந்த அணிக்காக மூன்றுமுறை கோப்பையும் வென்றுள்ளார்.இதனால்  தமிழ் ரசிகர்கள் இவரை "தல" என்ற பட்ட பெயரை வைத்து அழைத்து வந்தனர். (இவரது வாழ்க்கையை திரைப்படமாகவும் எடுத்து வசூல் சாதனை படைத்தது.)

இந்திய அணியில் எத்தனையோ வீரர்கள்  ஜொலித்திருப்பார்கள், ஆனால் சகாப்தமாகவும்  திகழ்ந்த ஒரு சிலரில் தோனிக்கும் இடமுண்டு. அவருடைய பயணம் அசாத்தியமானது. இவரை ரசிகர்கள் "கூல் கேப்டன்" என்றும் "தல" என்றும் அழைப்பார்கள். தனது உழைப்பால் உயர்ந்து இன்று வரை ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடம் வைத்துள்ளார் தல தோனி. 

2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் ஐ.சி.சி ஒருநாள் வீரர் விருது (இரண்டு முறை விருதை வென்ற முதல் வீரர்), 2007 ல் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மற்றும் இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் பத்மஸ்ரீ பட்டம், 2018 ஆம் ஆண்டு பத்ம பூஷன் பட்டம், லெப்டினன்ட் கர்னல் பதவி உட்பட பல விருதுகளை அளித்து மத்திய அரசு மகேந்திர சிங் தோனியை கவுரவித்தது.

 padma booshan award

1983 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியா உலக கோப்பையை பெற்றுகொடுத்த எம்.எஸ்.தோனி (இன்று) ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார்.இந்த செய்தி கேட்டு ரசிகர் பெரும் சோகத்தில் உள்ளனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Thanks a lot for ur love and support throughout.from 1929 hrs consider me as Retired

A post shared by M S Dhoni (@mahi7781) on

 

மகேந்திர சிங் தோனி.... இந்த பெயருக்கு பின்னால் உள்ள சாதனை,சறுக்கல்கள்,விமர்சனங்கள்,சர்ச்சைகள் பற்பல உண்மை ஒன்றே ஒன்றுதான் தோனி உழைப்பால் உருவான வீரர்...என்பது சற்றும் ஐயமில்லை.
 

MS Dhoni announces retirement from cricket fans in tragedy