சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

கொரானா அச்சத்தால் வீட்டின் வெளியே நின்ற கணவன் அனுமதிக்காத மனைவி

மதுரையை சொந்த ஊராய் கொண்ட பாஸ்கரன் அமெரிக்காவில் பணி புரிகிறார். 

அவர் பல்வேறு கட்ட கொராணா சோதனைக்கு பிறகு அவர் தன் இருப்பிடமான கேரளாவில் உள்ள வெள்ளிமலையை வந்தடைந்தார். 

ஆனால் அவரது மனைவி கொரானா அச்சத்தால் வெளியே வரவும் இல்லை,  வீட்டின் கதவை திறக்காமலும் தன் கணவரை வெளியே நிக்க வைத்துவிட்டார். 

பாஸ்கரன் தனக்கு கொராணா இல்லை என்றும்,  பல சோதனைகள் தாண்டி வந்துள்ளது பற்றியும் எவ்வளவு எடுத்து உரைத்தும் கதவு திறக்கப்படவில்லை. 

இதை கண்ட அப்பகுதி மக்கள் அவரது மனைவியுடன் தொலைப்பேசியுடன் பேசி பார்த்தும் ஏதும் முன்னேற்றம் இல்லை.  அவர்கள் கதவை திறக்கவே இல்லை. 

பின் பாஸ்கரன் வீட்டினுள் இருக்கும் தன் நான்கு சக்கர வாகனத்தை கொடுத்தால் அதை கொண்டு தன் சொந்த ஊரான மதுரைக்கு செல்வதாக கூறினார். 

அதற்கும் மறுத்துவிட்டார் மனைவி.  பின்பு அக்கம் பக்கம் உள்ள மக்களின் உதவியால் வீட்டு கதவை உடைத்து,  காரை எடுத்து கொண்டு மதுரைக்கு புறப்பட்டார் பாஸ்கரன். 

கொராணா அச்சம் மக்களை எப்படி ஆட்டிப்படைக்கிறது என்பதற்கு இது ஓர் நல்ல ஆதாரம் ஆகும்.

Husband was outside of house because of covid -19 fear by wife