சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

பஞ்சாப் சிங்கபெண், திருடர்களை விரட்டி பிடித்த சிறுமி

நகை திருட்டு,  வழிப்பறி கொள்ளை,  செல்போன் திருட்டு என பல திருட்டுகளில் ஒன்று தான் செயின் பறிப்பு திருட்டு.  இந்த செயின் பறிப்பு சம்பவங்கள் குறித்து நிறைய சிசிடீவி காட்சிகள் வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது.  குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை குறிவைத்து தான் இந்த செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து வந்துகொண்டுள்ளது. பல சிசிடீவி காட்சிகள் வெளியே செல்வதற்கு அச்சுறுத்தும் வகையிலும் இருக்கிறது. 

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் பகுதியில் டியூஷன் சென்று வீடு  திரும்பிய 15 வயது சிறுமி அவள். அந்த சிறுமியின் செயினை பறித்து கொண்டு இரண்டு இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில்  விரைந்து சென்ற போது, அவர்களை பின்தொடர்ந்து விரட்டி பின்னால் இருந்த இளைஞரை பிடித்து கீழே தள்ளி,  விடாமல் போராடியுள்ளார் அந்த சிறுமி.  

ஆயுதங்களை கொண்டு அந்த இளைஞன்  மிரட்டியும் விடவில்லை அந்த சிங்கபெண்.  சாலையில் இருந்தவர்கள் அவர்களை பிடித்தும் அந்த பெண் விடவில்லை. இந்த சிசிடீவி காட்சி இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 

சிறுமி  தானே நம்மை என்ன செய்துவிட முடியும் என்று எண்ணி செயின் பறித்த வாலிபர்களுக்கு சரியான பாகம் புகட்டிகனாள் அந்த சிறுமி.

15 year old girl chasing the thief who snatched her chain in public road