நன்றி, விசுவாசம் என்ற வார்த்தைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதும், பல வீடுகளில் குழந்தையாக இருப்பதும், காவலர்களுக்கு துப்பு துலக்க உதவுவதும் இந்த நாய் என்ற 5 அறிவு ஜீவன் தான்.
அந்த நாய்களுக்கு என்றே புகழ் பெற்ற ஊர் நம் தமிழ்நாட்டை சேர்ந்த இராஜபாளையம் ஆகும்.
இந்த இராஜபாளையம் நாய் என்பது வெள்ளை நிறத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் முன்பு காலத்தில் இது வெள்ளை நிறத்தில் மட்டுமல்லாமல் மற்ற நிறங்களிலும் இருந்துள்ளன. வெள்ளை நிறத்தில் உள்ள நாய் தங்களுக்கு பிடித்து போன காரணத்தால் அதை அதிகம் வளர்த்து வந்தனர். மற்ற நிற நாய்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிட்டது.
முதலில் இந்த இனத்து நாய்கள் எல்லாம் ஆந்திர மாநிலத்தை தான் தன் பூர்வீகமாக கொண்டுள்ளது. அங்கிருந்து இங்கு இருக்கும் மன்னர்களை சந்திக்க வந்த ஆந்திர மன்னர்கள் பரிசளித்தும், தமிழ்நாட்டு மன்னர்கள் அங்கு போருக்கு சென்ற போது கொண்டுவர வரப்பட்டுத்தான் இங்கு வந்துள்ளது இந்த இனத்து நாய்கள்.
அங்கு குறைந்து கொண்டே வந்து இன்று அழிந்து விட்டது இந்த இனத்து நாய்கள். நம் இராஜபாளையத்து ஆட்கள் வேட்டைக்காகவும், காவலுக்காவும் வளர்ந்த வந்ததால் இங்கு பெருகி வாழ்கிறது இந்த இனத்து நாய்கள்.
இப்போது இராஜபாளையத்தில் மட்டும் வளர்த்து வருவதால் இதன் பெயர் இராஜபாளையத்து நாய் என்றே பெயர் சூட்டப்பட்டது.
இராஜபாளையத்து நாய்களுக்கு என்றே தனி புகழ் , மரியாதை, மதிப்பு, வரவேற்பு இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாத உண்மை நிலை ஆகும்.
இப்போது இது வெள்ளை நிறத்தில் இளஞ்சிவப்பு நிற மூக்குடன், பளுப்பு நிறத்தில் ஆங்காங்கே புள்ளிகளுடன் இருக்கும். இந்த வகை நாய்களால் சூரிய ஒளியில் வெகு நேரம் நிற்க முடியாது. பிறந்து 50 நாட்களுக்கு பிறகு இதற்கு பயிற்சி கொடுத்தால் நன்றாக கவனித்து கற்றுக்கொள்ளுமாம்.
2005 ஆம் ஆண்டு இந்திய அஞ்சல்தலையில் இடம்பெற்ற ஒரே தமிழக நாய் இனம் நம் இராஜபாளையத்து நாய் மட்டுமே ஆகும்.
Informations about rajapalayam dog