பால் என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்த குட்டி ஈன்ற விலங்கின் மூலம் வரும் பானம் ஆகும்.
பொதுவாக மக்கள் பசு மாட்டின் பாலையும், எருமை மாட்டின் பாலையும் தான் பருகுவார்கள். கழுதையின் பாலை பருகினால் நிறைய நன்மை இருக்கும் என்று பரவலாக அறியப்படும் தகவல்கள் இருந்தாலும், நம் மக்கள் பொதுவாக அதை விரும்பவில்லை.
ஆனால் இப்போது இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் உள்ள வதோத்ராவில் கழுதை பால் 1 லிட்டர் 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது என்ற செய்தி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
எகிப்தில் உள்ள கிளியோபட்ரா என்னும் ராணி தன் அழகையும் இளமையும் காத்துக்கொள்ள கழுதை பால் அறுந்தியதாக ஓர் செய்தி சொல்லப்படுகிறது .
கழுதை பால் பருகுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிரிக்கும், அழகு கூடும் என்பது உண்மையே.
அதனால் தான் கழுதை பாலை கொண்டு அழகு சாதன பொருட்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றது.
பால் சம்மந்தப்பட்ட பொருட்களுக்கு பிரபலமான இடம் குஜராத்தான். அங்கு தான் அமுல் நிறுவனம் தொடங்கியது. இப்போது கழுதை பாலும் விற்பனைக்கு குஜராத்தில் நிலுவப்பட்டுள்ளது. பால் பொருட்கள் ஆதிக்கம் செலுத்தும் மாநிலம் என்றும் பெயர் வாங்க போகிறது குஜராத் என்ற தகவல் வெளியாகி உள்ளது .
இதனை கேட்ட மக்கள் அதிர்ச்சில் உள்ளனர்.
Shocking news that 1 liter milk is rs 7 thousand In Gujarat india.