சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

30 வருடங்களாக ஒரே ஒரு வயதான விவசாயி செய்த காரியம்

an-old-man-works-for-30-years-to-make-a-path-for-rain-water
  மீனா   | Last Modified : 13 Sep, 2020 06:10 pm இந்தியா பொது

பிகார் மாநிலத்தின்  கயா பகுதியில் உள்ள லத்துவா என்னும் கிராமத்தை சேர்ந்தவர் லாங்கி புயன் என்னும் விவசாயி. 

மலைப்பகுதியும் அதன் சம பகுதியில் உள்ள குளத்தில் உள்ள நீரின் அடிப்படையில் விவசாயம் என செழிப்புடன் திகழும்  அந்த பகுதி.  வெயில் காலத்தில் குளம் வேகமாக வற்றி வறண்டுவிடுவதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது என்பது லாங்கி புயன் அவர்களுக்கு பெரும் வருத்தமாகவே இருந்துள்ளது .

அதனால் மலையில் விழும் மழையை குளத்தில் சேரும்படி வாய்க்கால் பாதை வகுத்து வந்தால் இந்த கஷ்டம் தீரும் என்று முடிவு செய்தார் .

அதனால் 30 வருடம் முன்பு துவங்கினார் அந்த பணியை.  ஒற்றை ஆளாய் விடா முயற்சியுடன் வாய்க்கால் பாதை அமைக்கும் பணியை தொடந்தார். பலரும் வேடிக்கை  பார்த்தனர்,  கேலியும்  கிண்டலும் செய்து வந்தனர்,  குடும்பத்தார் தடுத்தனர். 

எனினும் 30 ஆண்டுகளாய் விடாமல் தொடர்ந்து முயற்சித்து செய்து முடித்தார் அந்த பணியை.  அதன்  விளைவாய்  மழை பெய்து மலை மேல் விழுந்த மழை துளிகள் அனைத்தும் ஒற்றை ஆளாய் வகுத்த பாதையின் வழியாய் வந்து குளத்தை சேர்ந்தது மழை நீர்.

அதனை கண்ட அவய் ஆனந்த கண்ணீரில் முழ்கினார்.

An old man works for 30 years to make a path for rain water