கேரளாவில், உள்ள மலப்புரத்தை சேர்ந்தவர் செரீப். பத்திரிகையாளரான இவரது கர்ப்பிணி மனைவி,கொரோனா பாதிப்பிற்காக மண்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து,கடந்த, 15ல் வீடு திரும்பினார்.
இந்நிலையில், சமீபத்தில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், மருத்துவமனையில் சேர்க்க, கணவர் உட்பட குடும்பத்தினர் முயற்சித்தனர்.மன்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா சிகிச்சைக்கானது. இங்கு மற்ற நோயாளிகளை அனுமதிப்பதல்லை என, அவரை மற்றொரு மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர்.
ஒரு தனியார் மருத்துவமனையில், கொரோனா அச்சத்தால், அந்த பெண்ணுக்கு அனுமதி மறுத்தனர்.அவருக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என,மண்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வழங்கிய சான்றிதழை, தனியார் மருத்துவமனை ஏற்கவில்லை.
இதையடுத்து, 14 மணி நேர போராட்டத்துக்கு பின், அவரை கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த காலதாமதத்தால்,அவருக்கு பிறந்த இரட்டை குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த,சுகாதார செயலர்க்கு உத்தரவிட்டுள்ள, சுகாதார அமைச்சர் சைலஜா கர்ப்பிணிக்கு நடந்த சம்பவம் மிக வேதனை அளிக்கிறது, இதற்கு காரணமானவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
A pregnant woman recovering from corona infection in Kerala died tragically as her hospitals did not allow her to give birth