சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

ஐஸ்க்ரீம் காட்டி பெண் குழந்தை கடத்தல்!சோதனைச் சாவடியில் சிக்கியது எப்படி?

girl-kidnapped-for-ice-cream-show
  India Border அருண் குமார்   | Last Modified : 08 Oct, 2020 08:17 pm இந்தியா பொது

தமிழக கேரள எல்லையான களியக்காவிளையில் சோதனைச் சாவடி அருகே செவ்வாய் இரவு ஒரு தம்பதி இரண்டு குழந்தைகளுடன் நின்றிருந்தனர். அதில் ஒரு பெண் குழந்தை கதறி அழுது கொண்டே இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு தம்பதியைப் பிடித்து விசாரித்தனர். அவர்களுடன் இருந்த 6 வயது சிறுவனிடம் விசாரித்த போது தம்பதியின் பெயர் ஜோசப் ஜான் மற்றும் எஸ்தர் லதா என்பது தெரியவந்தது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் காட்டாகடையைச் சேர்ந்தவர் ஜான். ஆந்திர மாநிலம் கல்யாண்பூரைச் சேர்ந்தவர் எஸ்தர்.இந்த தம்பதிகள் பெந்தகோஸ் பிரிவை சேர்ந்த, கிறிஸ்துவ மதத்தை பரப்பும் ஊழியத்தை செய்து வருகின்றனர். 

25 நாட்களுக்கு முன்பு பெங்களூருவுக்கு சென்ற இவர்கள் அங்கு மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தில், நின்று கொண்டிருந்த இரண்டரை வயது லோகிதாவுக்கு ஐஸ்க்ரீம் கொடுத்து தங்களுடன் அழைத்து வந்துள்ளனர்.
இதற்கிடையே லோகிதாவின் தாய் பெங்களூருவில் தன் குழந்தை மாயமானதாகவும் மீட்டுத் தரும்படியும் கோரிக்கை விடுக்கும் வீடியோ,சமூக வலைத்தளங்களில் பரவியது,அந்த விடியோவை பார்த்த களியக்காவிளை போலீசார் கவனத்திற்கு வந்தது. லோகிதாவின் பெற்றோர் சத்தியமூர்த்தி - கார்த்திகேஸ்வரி தம்பதிக்கு தகவல் தெரிவித்த போலீசார் அவர்களை களியாக்காவிளை வரவழைத்துள்ளனர்.

மேலும், ஜான் - எஸ்தர் தம்பதியுடன் இருந்த மற்றொரு 6 வயது சிறுவன் ஜோபின், ஜானின் முதல் மனைவிக்குப் பிறந்தவர் என்பதும் தெரியவந்தது. லோகிதாவுக்கு ஜான் தம்பதி தயாரித்து வைத்திருந்த போலி ஆதார் அட்டையையும் போலீசார் பறிமுதல்செய்துள்னளர்.

Child abduction by giving ice cream: Husband and wife trapped in a checkpoint