சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

மிக பெரிய விபத்து அதிஷ்டவசமாக உயிர் தப்பிய இந்திய வீரர்கள்.

the-biggest-accident-was-the-indian-soldiers-who-fortunately-survived
  India Border அருண் குமார்   | Last Modified : 08 Oct, 2020 08:42 pm இந்தியா பொது

இந்தோ திபெத்திய எல்லை காவல் படையைச் சேர்ந்த போலீஸ்காரர்கள், உத்தரகாண்ட் மாநிலம் முசோரி அருகே இன்று பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். குறுகிய வளைவுகளைக் கொண்ட சாலையில் சென்றபோது பேருந்து திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. தாறுமாறாகச் சென்ற பேருந்து, வளைவில் உள்ள ஒரு கட்டிடத்தின் மீது மோதி நின்றது. கெம்ட் நீர்வீழ்ச்சி அருகே இந்த விபத்து ஏற்பட்டது.

பேருந்தின் முன்பகுதி அந்தரத்தில் தொங்கியபடி இருந்தது. உள்ளே இருந்த வீரர்கள் ஒரு நிமிடம் அப்படியே உறைந்துபோயினர். பின்னர் சுதாரித்த அவர்கள், பேருந்தில் இருந்து லாவகமாக கீழே இறங்கினர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பேருந்து கொஞ்சம் அதிக வேகத்தில் வந்திருந்தால் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து உயிர்ப்பலி ஏற்பட்டிருக்கும்.

Indo-Tibetan border guards bus accident near Kemti Falls in Uttarakhand.