மகாராஷ்ட்ரா மாநிலத்தின் புனே, சோலாப்பூர், சாங்லி,சதாரா, கோலப்பூர் மாவட்டங்களே கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல ஊர்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சோலாப்பூர்,சாங்லி, புனே மாவட்டங்களில் மட்டும் மழை, வெள்ளத்தால் 27 பேர் உயிரிழந்தனர். அந்த மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 20,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
புனே மாவட்டத்தில் கனோட்டா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். மும்பையிலும் பெய்த கனமழையால் நகரின் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.
Maharashtra Two days of heavy rains and floods have claimed 27 lives.