சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

3 வயது குழந்தைக்காக நிற்காமல் சென்ற சிறப்பு ரயில்

a-train-runs-without-stopped-in-anywhere-to-safe-a-3-year-old-baby
  மீனா   | Last Modified : 28 Oct, 2020 02:05 pm இந்தியா பொது

உத்திரபிரதேச மாநிலத்தல் உள்ள ஷாத்பூரை சேர்ந்தவர் ஆஷா ரெயித்வார். அவரின் 3 வயது குழந்தை காவ்யா கடந்த அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி அன்று லலிட்பூர்  ரயில் நிலையம் அருகே காணாமல் போய்யுள்ளார். 

பெற்றோரின் புகாரின் படி  ரயில் நிலையத்தில் உள்ள சிசிடீவி கேமராவின் பதிவை பார்த்தனர் காவலர்கள். 

அதில் 3 வயது குழந்தை காவ்யா ஒரு இளைஞருடன் ஓர் ரயிலில் ஏறி பயணித்தது பதிவாகியுள்ளது. 

விசாரணையில் அந்த ரயில் ரம்ஜி சாகர் என்ற சிறப்பு ரயில் என்ற தகவல் தெரிந்துள்ளது.  அந்த மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள போபால் என்ற இடத்திற்கு செல்ல இருக்கும் ரயில் ஆகும். இதனை அடுத்து ரயில் நிலைய காவலர்கள் ஒயர்லெஸ் மூலம் வழியில் எந்த ரயில் நிலையத்திலும் நிற்காமல் ஓட்டும்படி அந்த ரயில் ஓட்டுனருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

அதனால் அந்த ஓட்டுனர் சுமார் 260 கிலோ மீட்டர் தூரம் நிற்காமல் ரயிலை இயக்கி ஓட்டியுள்ளார்.  

பின் போபாலில் நிறுத்தப்பட்ட அந்த ரயிலை சுற்றி வளைத்தனர் ரயில் பாதுகாப்பு படையினர்.  கடத்தல் காரர்களிடம் இருந்து குழந்தையை நல்லபடியாக மீட்டனர். 

இந்த சம்பவத்தின் மூலம் ரயில் நிலையத்தில் உள்ள அதிகாரிகள் மீது இருந்த மரியாதை மக்கள் மத்தியில் உயர்ந்துள்ளது.

A train runs without stopped in anywhere to safe a 3 year old baby