சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

ஒரு கள்ளகாதலுக்கு 10 பேரை கொலை செய்தவனுக்கு தூக்கு! வாரங்கள்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு?

execute-the-man-who-killed-10-people-for-a-fake-love-weeks-court-sensational-verdict
  India Border அருண் குமார்   | Last Modified : 28 Oct, 2020 06:43 pm இந்தியா பொது

தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தில் கோரப்பட்ட என்ற பகுதியில் கடந்த மே மாதம் 20 ம் தேதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். சாப்பாட்டில் மயக்க மருந்து கொடுத்து, கிணற்றில் தள்ளிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து தெலுங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்து பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார் என்ற நபரைக் கைது செய்த நிலையில், வாரங்கல் நீதிமன்றம் அந்தக் குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது...

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த மசூத் அவரது மனைவி நிஷா ஆகியோர் தனது குடும்பத்தினருடன் கடந்த 20 ஆண்டுகளாக வாரங்கல், கீர்த்தி நகரில் உள்ள கோணிப்பை தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தனர். அப்போது பீகாரைச் சேர்ந்த சஞ்சய் குமார் என்பவருடன் 5 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், நிஷாவின் அக்கா மகள் ரபிகா என்பவர் மேற்குவங்க மாநிலத்திலிருந்து தனது 16 வயது மகள் மற்றும் இரண்டு மகன்களுடன் பிழைப்பு தேடி அங்கு வந்தார். வாரங்கலில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்த ரபிகா, சஞ்சய் குமாருக்கு சமையல் செய்து கொடுத்து அதற்குண்டான பணத்தைப் பெற்று வந்தார். அவ்வாறு ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் மூன்று பிள்ளைகளுடன் ரபிகா சஞ்சய்குமாருடன் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தத் தொடங்கினார்...

இந்த நிலையில் ரபிகாவின் வயதுக்கு வந்த மகளுடன் சஞ்சய்குமாருக்குக் காதல் ஏற்பட்டது. இதனைக் கவனித்த, ’ரபிகா தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி, தற்பொழுது தனது மகளுடன் நெருங்கிப் பழகுவது முறையானது அல்ல’ என்று எச்சரித்துள்ளார். சஞ்சய் குமார் தனது காதலுக்கு இடையூறாக உள்ள ரபிகாவைக் கொலை செய்யத் திட்டமிட்டுக் கடந்த மார்ச்  மாதம் 7 ஆம் தேதி, ரபிகாவை திருமணம் செய்து கொள்வதாக கூறி மேற்கு வங்கத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். ரயிலில் சென்றுகொண்டிருந்த போது ரபிகாவுக்குத் தூக்க மாத்திரை கொடுத்து ரயிலில் இருந்து கீழே தள்ளிக் கொன்றுவிட்டு வாரங்கல் திரும்பினான்

இந்த நிலையில் சஞ்சய்குமாரிடம் ரபீகா எங்கே என நிஷா கேட்டுள்ளார். இதற்கு சஞ்சய்குமார், பீகாரில் உள்ள தனது வீட்டிற்கு ரபிகாவை அனுப்பி வைத்திருப்பதாக கூறி சமாளித்துள்ளான். இதில் சந்தேகமடைந்த நிஷா போலீசில் புகார் தெரிவிக்கப்போவதாக எச்சரிக்கை செய்துள்ளார். இதனால் ரபிகாவை தான் அழைத்து சென்ற விவரம் தெரிந்த மசூத் - நிஷா குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரையும் மொத்தமாகக் கொலை செய்யத் திட்டமிட்டான் சஞ்சய்.அதன்படி மசூதின் பெரிய மகனுக்கு மார்ச் 21 ம் தேதி பிறந்த நாள் பார்ட்டி நடத்தப்படுவதைத் தெரிந்து கொண்டு அதில் பங்கேற்பதற்காகச் சென்ற சஞ்சய்குமார், குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கலந்து அனைவருக்கும் கொடுத்துள்ளான் . அங்கு பணிபுரிந்த பீகாரைச் சேர்ந்த 3 இளைஞர்களும் பார்ட்டியில் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கும் தூக்க மருந்து கலந்த குளிர்பானத்தை வழங்கியுள்ளான்.

நள்ளிரவு வேளையில் அனைவரும் ஆழ்ந்த மயக்கத்தில் கிடந்த வேளையில் சஞ்சய் தனியாளாகக் கோணிப் பையில் ஒவ்வொருவராகக் கட்டி அருகில் உள்ள கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்தான். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு சஞ்சய்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும், ரபிகா கொலை செய்யப்பட்டது உறுதியானதைத் தொடர்ந்து ரயில்வே போலீசாரும் சஞ்சய் மீது கொலை வழக்குப் பதிவு செய்தனர். ஒரு முறையற்ற காதலுக்காக மொத்தமாக 10 பேர் உயிரை காவு வாங்கிய கொடூரன் சஞ்சய்குமாருக்கு இன்று வாரங்கல் விரைவு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது...

In the state of Telangana, a Warangal court has handed down a death sentence to a man who killed 10 people.