தெலுங்கானாவில் மாநிலத்தில் உள்ள நெய்சல் என்னும் ரயில் நிலையம் உள்ளது. கொரோனா காரணத்தால் அந்த ரயில் நிலையத்தில் கடந்த ஆறு மாத காலங்களாக ரயில்கள் நின்றே இருந்தது .
அதில் ஒரு ரயில் பெட்டியில் தீடீரென தீ பிடித்தது. பின் அடுத்த அடுத்த பெட்டிகளுக்கும் தீ பரவ ஆரம்பித்தது.
அங்கு இருந்த ரயில் நிலைய ஊழியர்கள் தீயணைப்பான் உபயோகித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பின் தீ அணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களும் ஒன்று இணைந்து தீயை அணைக்க முயற்சித்து , தீயை அணைத்தனர்.
காவலர்கள் தீ பிடித்த காரணத்தை தீர விசாரித்து வருகின்றனர் .6
Fire accident in standing train