கேரள மாநிலம் கொள்ளம் மாவட்டத்தில் உள்ள ஒச்சிரா என்ற பகுதியை சேர்ந்தவர் திரு. சந்திரபாபு என்பவர். இவர் லாரி ஓட்டுனர் ஆக பணிபுரிந்து வருகிறார்.
இவர் வீட்டில் இருந்த போது தனது கைபைசியை தான் உறங்கும் முன்பு உபயோகித்துவிட்டு பின் தலையணைக்கு கீழ் கைபேசிக்கு சார்ஜ் போட்டு விட்டு உறங்கியுள்ளார் .
தீடீரென சார்ஜர் வெடித்து தீ பிடித்து அவரது தலையணையில் தீ பற்றிவிட்டது. அவரது முகம் மற்றும் தோல்பட்டையில் தீ காயம் ஏற்பட்டுள்ளது.
பின் அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .
கைபேசி சார்ஜ் செய்யும் போது விபத்து என்ற செய்தி ஒன்றும் புதிதல்ல என்றாலும், மக்கள் தான் இதை கவனமாக கையாள வேண்டும் என்பதை வருத்தத்துடன் ஏற்றுக்கொள்ளப்படும் உண்மை ஆகும்.
Fire accident happened because of mobile in charging position under pillowt6