சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

ஆழ்துளை கிணற்றில் மறுபடி ஓர் சிறுவன், இரண்டாம் நாளாக மீட்கும் பணி தொடர்ந்துள்ளது

a-boy-fell-down-in-a-200-feet-borewell-hole
  மீனா   | Last Modified : 05 Nov, 2020 10:01 pm இந்தியா பொது

மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள விவாரி மாவட்டம் ப்ரித்விப்பூர் என்னும் பகுதியை சேர்ந்த சேது புராவரா என்னும் கிராமத்தை சேர்ந்தவர் திரு.  ஹரிகிருஷ்ணன் அவர்கள். 

அவருக்கு 3 வயதில் ப்ரதலால் என்ற ஓர் ஆண் மகன் இருக்கிறான்.  அவன் விளையாடும் போது மூடப்படாத ஆழ்துளை கிணறு ஒன்றில் தவறி விழுந்துவிட்டான்.  அது 200 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணறு ஆகும்.  

தகவல் அறிந்த மீட்பு பணியினர் மற்றும் ராணுவ வீரர்கள் அந்த  இடத்திற்கு விரைந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

இன்று இரண்டாவது நாளாக மீட்கும் பணி தொடர்ந்து கொண்டுள்ளது.  சிறுவனை உயிருடன் மீட்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் பிராத்தனை செய்து வருகின்றனர். 

ஆழ்துளை கிணறு மூடாமல் வைத்த நபருக்கு கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று இணையத்தில் பலரும் கூறி வருகின்றனர். 

விண்ணில் செலுத்தும் ராக்கெட்கள் வெற்றி அடைந்த நாட்டில் பூமிக்குள் நுளைத்து சிறுவர்களை காப்பாற்றும் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட வில்லை என்பது கசப்பான  உண்மை ஆகும்.

A boy fell down in a 200 feet borewell hole,