சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

பேராபத்து ஏற்படும் நிலையில் இந்தியா

இந்தியாவில் கடலோர பகுதியில் உள்ள  பல்வேறு நகரங்கள் நீரில் மூழ்குவதற்கான  அபாயம் வெகுதூரத்தில் இல்லை .காரணம் ,உலக அளவில் ஏற்படும் பல்வேறு பருவநிலை மாறுதல்களால் கோடைகாலங்களில் ஆங்காங்கே மலைப்பகுதிகளில் மற்றும்  வனப்பகுதிகளில்  காட்டுதீ பரவுகின்றது .அதை அணைக்க அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட தீயை அணைக்க முடியாமல் பெரும் இழப்பு ஏற்படுகிறது .

வனப்பகுதிகளில் வாழும் விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர்  ஏதும் கிடைக்காமல் காட்டை விட்டு வெளியேறுகின்றன .இவ்வாறு பறவைகளும் வன விலங்குகளும் காட்டை விட்டு வெளியேறி உணவு மற்றும் தண்ணீருக்காக அலைவது ஒரு பக்கம் இருக்க ,வெளிநாடுகளில் கடும் குளிர் போன்ற மாற்றங்கள் அதிகமாக உள்ளன .வெய்யில் மற்றும் குளிர் சராசரி அளவை தாண்டி உள்ளது .பனிக்கட்டி உருகி  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி  நகரங்களே மூழ்கும் அளவுக்கு பருவநிலை மாற்றங்கள் ஏற்படக்கூடிய நாள் வெகு தொலைவில் இல்லை என்று சொல்லுமளவுக்கு உலகில் பல்வேறு மாற்றங்கள் நிகழ போகிறது என்று புவியியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர் .

india_geos

எப்படி ஓசோனில் ஏற்பட்ட துளையானது இந்த கொரோனா தொற்று காரணமாக மாசு குறைபாடு காரணமாக தானாகவே சரி ஆனதோ அது போல நாம் நம் இயற்கை  வளங்களை பாதுகாக்கவில்லை என்றால் வருங்கால சந்ததிகள் வாழ இந்த உலகம் இருக்காது .எப்படி மிகப்பெரிய கட்டிடங்களை உருவாக்கி ஆழ்துளை நிலத்தில் போட்டு நிலத்தில் உள்ள  நீர் அனைத்தையும் உறிஞ்சி எடுத்து இப்பொழுது நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது அதுபோல உலகில் உள்ள வளங்கள் மனதருக்காக மட்டும் படைக்கப்படவில்லை என்பதை ஒருஒருவரும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் .

நாம் உபயோகிக்கும் பல சாதனங்களால் புவி வெப்பமயமாதல் ஏற்படுகிறது .புவி வெப்பமயம் ஆதலால் உலகில் உள்ள பல்வேறு பனிமலைகளும் உருகி கடலின் நீர்மட்டத்தின் பரப்பு அதிகமாகி பல்வேறு நாடுகளில் உள்ள நகரங்கள் மூழ்க போகிறது என எப்பொழுதோ வெளியிடப்பட்டது .

இதனால் நாம் எந்த அளவுக்கு இயற்கை வளங்களை பாதுகாக்க முடியுமோ அந்த அளவுக்கு பாதுகாக்க வேண்டும் .முடிந்த அளவு நிறைய மரக்கன்றுகளை நட வேண்டும் .காடுகளை அழித்து கட்டிடங்களை உருவாக்குவதை தவிர்க்க வேண்டும் .

நாம் நமக்கான இயற்கை வளங்களை பாதுகாக்கவில்லை என்றால் நாம் உணவிற்காக பலநாடுகளை கையேந்தும் நிலைமை வந்துவிடும் .மண்வளத்தையும் , இயற்கை வளத்தையும்  அழித்து விட்டால் நாடு நரகமாகிவிடும் நிலைமை வந்துவிடும் .

 

The risk of submergence of various coastal cities in India is not far off, as wildfires spread in the mountains and forests during the summers due to various global climate changes.