N-95 முகக்கவசம்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவிய போது முகக்கவசம் 'என்-95 ' மற்ற முகக்கவதை விட மிகச்சிறந்தது என்று பரிந்துரை செய்யப்பட்டது இந்த முகக்கவசம் முக்கியமாக மருத்துவர்கள் மற்றும் கொரோனா நோயாளிகளுடன் பணிசெய்பவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் .அனைவரும் உபயோக படுத்த ஆரம்பித்தால் முகக்கவசம் 'என்-95 'பற்றாக்குறை ஏற்படும் என்று மக்களுக்கு பலவகை முகக்கவசத்தை பயன்படுத்த பரிந்துரை செய்யப்பட்டது .அதில் எந்தவகை முகக்கவசம் அனைவரும் பயன்படுத்துவது நல்லது என்று பார்க்கலாம் .முக்கியமாக வால்வு உள்ள முகக்கவசம் பயன்படுத்துவது நல்லது அல்ல என மத்திய மாநில அரசாங்கம் அறிவுறுத்தி வருகிறது .
முகக்கவசத்தில் அமைக்கப்படும் வால்வுகள் , உள்ளே இருந்து காற்று எளிதாக வெளியேறும் வகையில் இருக்கும். அது வடிகட்டப்படாது. அவ்வாறு வடிவமைக்கப்பட்ட முகக்கவசங்களை அணிந்தால், அணிந்திருப்பவருக்கு கொரோனா இருந்தால் அது பிறருக்கு பரவும், என குறிப்பிடுகின்றனர் .
துணியால் செய்யப்பட்ட முகக்கவசம்
பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது சாதாரண துணியால் செய்த முகக்கவசத்தை அணிவதே சிறந்தது என்றும், அந்த முகக்கவசம் மூக்கு மற்றும் வாய் நன்றாக மூடப்பட்டிருக்க வேண்டும் என மத்திய மாநில அரசு வலியுறுத்துகிறது .
ஒருவர் பயன்படுத்திய முகக்கவசத்தை இன்னுருவர் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது .
துணியால் ஆனவை என்றும் , சோப்பு போட்டு துவைத்தாலும், அவரவர்க்கென்று தனித்தனி முகக்கவசம் பயன்படுத்துவது நல்லது .
துணியால் செய்யப்பட்ட முகக்கவசம் அணியும் போது ,முகக்கவசம் அணிந்தவருக்கு தொற்று இருந்தால் யாரிடமும் பரவாது என்று வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர் .
அதனால் முகக்கவசம் அணிந்து தொற்றுநோய் வராமல் நம்மை பாதுகாத்துக்கொள்ளவேண்டும் .
It is better to use any kind of mask As recommended by the Government