சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

ஏழாம் அறிவு திரைப்பட கதையை சாத்தியமாக்கிய இரு விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு

tamil-movie-name-yezham-arivu-which-becomes-true-by-two-lady-scientists-who-awarded-nobel-prize
  மீனா   | Last Modified : 08 Oct, 2020 01:55 pm அறிவியல் மருத்துவ அறிவியல்

மரபணு என்பது ஓர் ஏணியை முறுக்கியது போல் இருக்கும்.  இது மனிதர்கள்,  விலங்குகள், பூச்சிகள்,  புழுக்கள் மற்றும் தாவரங்கள் போன்ற எல்லா உயிரினங்களுக்குள்ளும் இருக்கும் செல்களில் உள்ள ஓர் அங்கம் ஆகும். 

இது தான் நிறம்,  குணம், பண்பு,  தோற்றம்,  வளர்ச்சி போன்ற எல்லாவற்றையும் நிற்னயிக்கும் இரகசிய குறியீடு ஆகும். 

இதை ஆங்கிலத்தில் ஜீன் என்பார்கள்.  இது  தான் வாழ்க்கையின் மாற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும். ஆம் ஒரு நொடி கோபத்தால் வாழ்க்கை இழந்தவர்களும் உண்டு,  ஒரு நொடி மயங்கியதில் வாழ்க்கை துணையை கண்டெரிந்தவரும் உண்டு.  இந்த கோபம்,  மயக்கம் , பொறுமை , அவசரம் என அத்தனையும் நிற்னயிப்பது இந்த மரபணுக்கள் ஆகும். 

இந்த மறுபணுக்களில் சிலவற்றை மாற்றினால் வாழ்க்கையே  மாறும்.  அதற்கான முயற்சியில் ஈடுபட்டுனர் இரு பெண்கள். 

அவர்களின் பெயர் "இம்மானுவேல் சார்பெண்டையர் " மற்றும் "ஜெனிபர் ஏ.  டவுட்னா" ஆகும். 

மரபணு சமந்தபட்ட நோய்களால் தாக்கியவர்களுக்கும் , பல கேன்சர்களால் தவிக்கும் மக்களுக்கும் மறுவாழ்வு அளிக்கும் வகையில் இந்த முயற்சி உள்ளது  .

பாதிக்கப்பட்ட மரபணுக்களை வெட்டி எடுத்துவிட்டு, நல்ல மரபணுக்களை சேர்த்தால் இது சாத்தியமே.  ஆனால் வெட்டிவதற்கு கத்தரிகோல் தேவைப்படுகிறது அது உலோகமால் ஆனா கத்தரிக்கோலாக இருக்க கூடாது,  மரபணுக்களாக உருவாக்கபட்டுருக்க வேண்டும்.  அப்போது தான் இந்த முயற்சி சாத்தியம் ஆகும். 

அதனை சாத்திமாக்கியுள்ளார் அந்த இரு பெண்மணிகள்.  இதனால் மரபு சார்ந்த பிரச்னைகள் மற்றும் புற்றுநோய்  போன்ற கொடிய நோய்களுக்கு புதிய சிகிச்சை முறை கண்டுபிடிக்க வழி வகுத்துள்ளது மற்றும் பூச்சிகள் அண்டாமால், எல்லா காலங்களிலும் தாக்குபிடிக்க கூடிய தாவங்கள் கூட உருவாக்கலாம் என்றும் கூறப்படுகிறது.  இதனால் பலரும் பலன் அடைய இருக்கிறார்கள். 

அதனால் இந்த ஆண்டின் வேதியில் துறையில் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் "ஏழாம் அறிவு " தமிழ் திரைப்படம் சாத்தியமாவது போல் இருக்கிறது என்று இணையத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். 

Tamil movie name yezham arivu which becomes true by two lady scientists who awarded Nobel Prize