செவ்வாய்கிரகத்தின் நிலவான போபோஸ்-ஐ (Phobos) இஸ்ரேவின் மங்கள்யான் விண்கலன்படம் பிடித்து அனுப்பியுள்ளது.
2013-ம் ஆண்டு இஸ்ரோ நிறுவனம் செவ்வாய் கிரகத்தை ஆராய மங்கள்யான் விண்கலனை விண்ணில் செலுத்தியது பிறகு 2014-ம் ஆண்டு செவ்வாயின் சுற்று வட்டப் பாதையில் மங்கள்யான் விண்கலன் நுழைந்தது அன்று முதல் செவ்வாய்க்கிரகம் குறித்த ஆராய்ச்சியில் மங்கள்யான் விண்கலன் ஈடுபட்டு வருகிறது.
இப்பொது செவ்வாய் கிரகத்தின் மிக நெருக்கமான மற்றும் மிகப் பெரிய நிலவான போபோஸின் படத்தை, மங்கள்யான் விண்கலனில் உள்ள மார்ஸ் கலர் கேமரா படம் பிடித்துள்ளது.
சென்ற ஜூலை 1-ம் தேதி செவ்வாய்க்கு 7,200 கிலோ மீட்டர் தூரத்தில் மற்றும் போபோஸில் இருந்து 4,200 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தும் மல்கள்யான் இந்த படங்களை எடுத்து அனுப்பியுள்ளது.
செவ்வாய் கிரகத்தின் போபோஸ் நிலவு அதிகம் அறியப்படாத மர்மமான நிலவு என இஸ்ரோ கூறுகிறது.
மேலும் அமெரிக்கா, ரஷ்யா,ஐய்ரோப்பா ஆகிய மூன்று நாடுகளும் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலனை வெற்றிகரமாக அனுப்பியிருந்த நிலையில், 2014-ல் நான்காவது நாடாக இந்தியாவும் இணைந்தது. முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்பிய முதல் நாடு என்ற சாதனையை இந்தியா படைத்தது.
விண்வெளிஆராய்ச்சியில் வேகமாக முன்னேறிவரும் சீனா நாடு 2011 இல் செவ்வாயை ஆராய செயற்கைக்கோள் 2011 இல் அனுப்ப எடுத்த முயற்சி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது .
Phobos, the moon of Mars Mangalyaan catches the spacecraft.