சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

இந்தியாவில் தோன்றும் வால் நட்சத்திரம் பற்றி நாசா கூறுவது என்ன

இந்தியா முழுவதும் இன்றும் நாளையும் அதாவது( ஜூலை 11 மற்றும்  ஜூலை 12 ) ஆகிய நாட்களில்  வானில் வால் நட்சத்திரம் தெரியும் என்றும் மேலும் இந்த வால் நட்சரத்தை  வெறும் கண்களால் பார்க்க முடியும் என்றும் நாசா கூறியுள்ளது. 

வானில் அவ்வபோது இதுபோல அதிசயம் நிகழ்ந்து வருகிறது. அந்தவகையில், இந்தியாவில் இன்றும் நாளையும் வானில் வால்நட்சத்திரம் தெரியும் என நாசா அறிவித்துள்ளது. நியோவைஸ் அல்லது கோமெட் 2020 என பெயரிடப்பட்டுள்ள இந்த வால்நட்சத்திரத்தை இந்தியாவில் வெறும் கண்களால் காண முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இன்று அதிகாலை நேரத்தில் மிக உயரத்திலும், நாளை மாலை நேரத்தில் சூரியன் மறைந்த பிறகு வடமேற்கு அடிவானத்தில் தெரியும்.

பூமிக்கு அருகில் பெரிய அளவில் புறஊதா கதிர்களின் ஆற்றல் பரவுதல் என்பதை குறிக்கும் வகையில் இதற்கு நியோவைஸ் என்ற  பெயரிடப்பட்டுள்ளது என நாசா கூறுகிறது. முதன் முதலில் பிரான்ஸ் நாட்டின் மாண்ட்லுகன் பகுதியில் கடந்த 8ம் தேதி சூரியன் மறைந்த பின்னர் மாலை நேரத்தில் வால் நட்சத்திரம் தெரிந்துள்ளது. இந்த காட்சியை நாசா வெளியிட்டுள்ளது. அதேபோல், அமெரிக்கா, இத்தாலி, வடக்கு அயர்லாந்து பகுதிகளிலும் தெரிந்துள்ளது.

நியோவைஸ் வரும் 22ம் தேதி பூமிக்கு மிக அருகில் சுமார் 103 மில்லியன் கி.மீ தொலைவில் இருக்கும். கடந்த மார்ச் 27ம் தேதி நாசாவின் எக்ஸ்போரர் தொலைநோக்கி மூலமாக கண்டறியப்பட்ட இந்த வால்நட்சத்திரம், கடந்த 3ம் தேதி சூரியனுக்கு அருகில் 43 மில்லியன் கி.மீ தூரத்தில் கடந்து சென்றது. இது சூரியனுக்கும் புதன் கோளுக்கும் இடையிலான சராசரி தூரத்தை விட குறைவானதாகும்.

மேலும் வால்நட்சத்திரமானது அதன் நீளமான சுற்றுப்பாதையை முடிக்க சுமார் 6800 ஆண்டுகள் ஆகும். எனவே இதை இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பார்க்க முடியாது எனவும் நாசா அறிவித்துள்ளது.


 

NASA has said that the comet is visible in the sky today and tomorrow (July 11 and July 12) across India, and that the comet can be seen with just the naked eye.