சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

பூமி சுழலுவதை நிறுத்திவிடுமா? கேட்கவே தலையை சுத்துது .. என்ன சொல்கிறது நாசா

பூமியின் காந்தப்புலம் கிரகத்தைச் சுற்றி ஒரு பாதுகாப்பு கவசம் போல செயல்படுகிறது - ஆனால் இது வழக்கத்திற்கு மாறாக பலவீனமான இடத்தைக் கொண்டுள்ளது அண்ட கதிர்வீச்சு, சூரியனின் தீங்கு விளைவிக்கும் துகள்கள் ஆகியவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் பூமியின் காந்தப்புலம் பலவீனமடைந்து வருகிறது என்று  விஞ்ஞானிகள் தெரிவித்து வந்தநிலையில் .

naasa1

மேலும் பூமியின் காந்த மண்டலம் பலவீனமடைந்து வருகின்றதற்கான காரணங்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வரும் சூழ்நிலையில், பூமியின் வடக்கு மற்றும் தெற்கு துருவங்கள் சில லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறை  தமது துருவத் தன்மைகளை மாற்றி அமைத்துக்கொள்ளும் என்று நாசா ஆய்வு ஒன்றை வெளியிட்டு இருந்தது. மேலும், உலகின் காந்த புலம் பலவீனம் அடைந்து கொண்டே வருவதை உறுதி செய்து தற்பொழுது நாசா  புகைப்படத்தை வெளிட்டுள்ளது .

naasa2

இந்த காந்த மண்டலம் இல்லாவிட்டால் நாம் நினைத்து கூட பார்க்கமுடியாது  பூமியானது வறண்டு செவ்வாய்க் கிரகத்தைப் போன்று மாறிவிடும். அதேபோல்  பூமியை இயங்கச் செய்வதற்கு இந்த காந்த மண்டலம் தான் மிக முக்கிய காரணமாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

naasa5

இதன் அடிப்படையில்  ஆப்பிரிக்காவிற்கும் தென் அமெரிக்காவிற்கும் இடையில் பூமியின் காந்தப்புலம் பலவீனமடைந்து, செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளிகளுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது என சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன. மேலும், விஞ்ஞானிகள் பூமி ஒரு துருவம்  தலைகீழாக மாறும் சூழ்நிலை ஏற்படும் என்று கூறியுளார்கள் . இதுபற்றி கூர்மையாக கவனித்து வரும்   விஞ்ஞானிகள், தெற்கு அட்லாண்டிக் ஒழுங்கின்மை என அழைக்கப்படும் ஒரு பகுதி சமீபத்திய ஆண்டுகளில் கணிசமாக வளர்ந்துள்ளது என்பதைக் கண்டறிந்தனர்

அதுபற்றி நாசா வெளியிடுள்ள புகைப்படம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது .

Will the earth stop spinning?Earth’s magnetic field acts like a protective shield around the planet — but it has an unusually weak spot, where particle radiation can interfere with onboard computers and satellites. How @NASA Earth researchers monitor its changes