சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

கொரோனா பரவலை தடுக்க கோவை கே.பி.ஆர் மாணவர்களின் மீண்டும் ஒரு அசத்தல் முயற்சி

கொரோன ஆரம்ப  நிலையில் இருந்து  கே .பி. ஆர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மாதம் தோறும் புதிய கண்டுபிடிப்பை உருவாக்கி வருகின்றனர் 

.இதற்கு முன்னர் ஃபேரன்டைசர் என்ற கருவியை உருவாக்கினார்கள் .அதுபோன்று தற்பொழுது  புதுமையாக சோவையர்(sowaier ) என்ற கருவியை உருவாக்கியுள்ளனர் .

கே.பி.ஆர் கல்லூரியின் இயந்திரவியல் துறையை சார்ந்த  மாணவர்கள் நான்காம் ஆண்டு மாணவர்கள் ஜே.கேசவ் பிரஷாத்,சு .கவின் பிரதீப் ,ம.கார்த்திகேயன்  மற்றும் ச .ஆ .லலித் கிஷோர்  ஆகியோர் உதவி பேராசிரியர்  பா.க .சரவணன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் இந்த கருவியை வடிவமைத்துள்ளனர் .

இந்த கருவியானது பயனாளர்கள் தங்கள் கைகளை குழாயின் முன்பு காண்பிக்கும் பொழுது ,முதலில் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் தானியங்கியாக சோப்பு நீரை முதலில் தரும் .
கைகளை சோப்பு நீர் கொண்டு 20  வினாடிகள்  நன்றாக தேய்த்து சுத்தம் செய்த  பின்னர் ,அதே குழாயின் முன் காண்பிக்கும் பொழுது தானியங்கியாக சுமார் 30 வினாடிகள்  வரை தண்ணீர் அளிக்கும். 
கைகளை தண்ணீர் கொண்டு கழுவிய பின்னர் தானியங்கியாக கைகளை ஹாண்ட் ட்ரயர் மூலம் உலர்த்தி கொள்ளலாம் .

இக்கருவியின் பயன்கள் :
இக்கருவியானது தொடர்பின் மூலம் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க  உதவுகிறது .
எப்படியென்றால் நாம் குழாயை தொட வேண்டிய அவசியமே இல்லை .அனைத்தும் தானியங்கியாக இயங்குகிறது .
ஒரு மணி நேரத்தில் சுமார் 50 முதல் 60  நபர்கள் வரை இந்த கருவியை பயன் படுத்த முடியும் .இக்கருவியை பள்ளிகள் ,கல்லூரிகள் ,தொழில் நிறுவனங்கள் ,உணவகங்கள் மற்றும் வணிக வளாகங்கள் அனைத்திலும் மிக சுலபமாக பயன் படுத்த முடியும் .

இந்த கருவியை உருவாக்கி சாதனை படைத்த மாணவர்களையும் அவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்களையும் ,உறுதுணையாக இருந்த இயந்திரவியல் துறையின் தலைவர் முனைவர் ந.குணசேகரனையும் ,கே.பி.ஆர் குழுமங்களின் தலைவர் முனைவர்  கே.பி. ராமசாமி ,பொது மேலாளர் திரு .முனுசாமி ,கல்லூரியின் முதல்வர் முனைவர் மு. அகிலா மற்றும் முதன்மை செயலாளர் முனைவர் ஏ.எம்.நடராஜன் ஆகியோர் பாராட்டினார்கள்.

Coimbatore KPR College students' desperate attempt to prevent corona spread.KPR Institute of Engineering and Technology is an engineering college Coimbatore,