சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

ஆம்புலன்ஸ் வர தாமதம்!! விபத்தில் தந்தை பலி !! இதனால் ஏற்பட்ட மாற்றம்? மதுரையைச் சேர்ந்த இரட்டை மாணவர்களின் சாதனை

மதுரை மாவட்டம், மேலுரைச் சேர்ந்த பாலகுமார் மற்றும் பாலசந்தர், 17  ஆகிய இருவரும் இரட்டையர்கள் ஆவார்கள் .  இவர்கள் அருகில் உள்ள அரசு இரு பாலர் பள்ளியில், பிளஸ் 2 படித்துவருகின்றனர் .இவர்கள் தன் சிறு வயதிலேயே விபத்தினால் காயமுற்ற தன் தந்தையை ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால் தன் தந்தையை இழந்துள்ளார்கள். 

இதனால் விபத்தில் காயமுற்ற தன் தந்தையை ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால் தன் தந்தையை  இழந்த இவர்கள் .இனிமேல் இதுபோன்ற உயிரிழப்பு ஏற்பட்ட இருக்கவும்   ஆம்புலன்ஸ்  வழித்தடங்களில் தடையின்றி சேவை செய்ய தானியங்கி சிக்னலை கண்டுபிடித்துள்ளார்கள்'.

மேலும் அவர்கள் கூறியதாவது   உயிருக்கு போராடுபவர்களை ஏற்றி செல்லும் ஆம்புலன்ஸ் தயாரிகியதும், சிக்னலுக்கு, 2 கி.மீ., துாரம் முன்கூட்டியே, அதில் உள்ள ஜி.பி.எஸ்., கருவி மூலம், கட்டுப்பாட்டு அறைக்கு எஸ்.எம்.எஸ்., வந்து விடுமாம்.

இதனால் , 'சர்க்யூட் போர்டு' தானாக இயங்க ஆரம்பித்து, சாலையோர சிக்னல் விளக்கில் கட்டப்பட்டுள்ள ஒலிபெருக்கியில், 'ஆம்புலன்ஸ் வருகிறது வழி விடுங்கள்' என தெரிவிப்பதோடு, ஊதா நிறத்தில் விளக்கு ஒளிரும்.சிக்னலை ஆம்புலன்ஸ் கடந்ததும், மீண்டும் கட்டுப்பாட்டு அறைக்கு எஸ்.எம்.எஸ்., சென்று, ஒலிபரப்பு துண்டிக்கப்படும். இதனால் பல உயிர்களை காப்பாற்ற முடியும் என்று கூறினர்கள்.

இதனை அறிந்த பலர் இரட்டையர்களான பாலகுமார் மற்றும் பாலசந்தர் ஆகிய இருவருக்கும்  பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் .

Twins Balakumar and Balachander from Melur, Madurai district; students have invented automated ambulance signal technology to prevent fatalities caused by traffic jams