சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

ஸ்வீடன் விருது பெரும் திருவண்ணாமலை மாணவி வினிஷா உமாசங்கர் தமிழக முதல்வர் வாழ்த்து

சூரியசக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியைக் கண்டுபிடித்து, திருவண்ணாமலையைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவி வினிஷா உமா சங்கர் சாதனை படைத்துள்ளார். இதற்காக இவருக்கு ஸ்வீடன் நாட்டின் குழந்தைகளுக்கான சூழலியல் அறக்கட்டளை சார்பில் இள வயது கண்டுபிடிப்பாளர்களுக்கான விருது அரவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வினிஷா உமாசங்கர்  கூறியாதவது :

எனது 5 வயதில் எனது தந்தை அறிவியல்களஞ்சிய  புத்தகத்தை பரிசாக தந்தார்  அது தான் உயர்த்துக்கு கொண்டு சென்றது. மேலும்  நான் வடிவமைத்த இஸ்திரி பெட்டி உள்ள வண்டியின் மேல்புறத்தில் சூரிய ஒளித் தகடுகள் பொருத்தப்பட்டு  100 ஏ.எ ச். திறன் கொண்ட மின்கலனுடம் இணைக்கபட்டிருக்கும்.

இந்த மின் கலனை முழுமையாக மின்னேற்றம் செய்ய 5 மணி நேரம் சூரிய ஒளி தேவை. இதன் மூலம் 6 மணி நேரம் வரை தொடர்ச்சியாக இஸ்திரி செய்ய முடியும். இந்தத் தொழில்நுட்ப்பத்தைக் கண்டறிய எனக்கு 2 மாத காலமானது. இதன் வடிவமைப்பை குஜராத்தில் உள்ள நேஷனல் இன்னோவேஷன் அறக்கட்டளையின் பொறியாளர்கள் வடிவமைத்து, காப்புரிமை பெற விண்ணப்பித்துள்ளனர் . இந்த ஆண்டு இறுதிக்குள் காப்புரிமையும் கிடைத்துவிடும். தற்போது கரோனா தடுப்பு நடவடிக்கையாக தொடாமல் இயங்கும் வகையிலான உபகரணங்கள் உருவாகும் பணியில் ஈடுபட்டுள்ளேன் என்று அவர் கூறினார்.

முன்னதாக இவர், தானாகவே இயங்கும் வகையில் மின் விசிறியை கண்டுபிடித்துள்ளார் என்பது குறிப்பிடக்கது.

மேலும் இவர் கடந்த ஆண்டு, டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் இக்னைட் விருதும், சிறந்த பெண் கண்டுபிடிப்பாளர் பிரிவில் டாக்டர் பிரதீப் பி தேவனூர் விருதும் அவருக்கு பெற்றுள்ளார் .

அதனை தொடர்ந்து தற்பொழுது பிரதமரின் ராஷ்டிரீய பால் சக்தி புரஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

மேலும்  சூரிய ஒளி இஸ்திரி பெட்டி கண்டுபிடிப்புக்காக ஸ்வீடனின் துணை பிரதமர் இசபெல்லா லோ இணையவழி நிகழ்வில், ஸ்வீடன் நாட்டின் குழந்தைகளுக்கான சூழலியல் அறக்கட்டளை சார்பில் விருது வழங்கப்படுகிறது.  இந்த விருது ஸ்வீடன் நாட்டின் பண மதிப்பில் ரூ. 8 லட்சத்து 63 ஆயிரம் ஆகும் . இந்த பரிசு தொகையை தனது வருங்கால கண்டுபிடிப்புகளுக்குப் பயன்படுத்தவுள்ளதாக வினிஷா உமாசங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமி மாணவி வினிஷா உமாசங்கர்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் 

sweden award winning Thiruvannamalai student Vinisha Umasankar When I was 5 years old my father gifted me a science encyclopedia book which is what took me to the heights.