சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

கோலாகலம் நிறைந்த திருமணங்கள்

திருமணம்  என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது, ஆயிரங்காலத்து பயிர்,  இரு மனம் சேர்வது திருமணம் என்று காலங்காலமாக திருமணத்திற்கு ஓர் பெரிய அங்கீகாரம் வகித்து வருகிறது நமது சமூகம்.
முன்னோர்கள் காலத்தில் திருமணம் என்றால் ஒரு மாதக்காலம் கொண்டாடப்படும் ஒரு திருவிழா நிகழ்ச்சி மாதிரி. சொந்த பந்தங்கள் பங்காளிகள் தெரிந்தவர்கள் என அனைவரும் கூடி கூதூகலமாய் இருந்தார்கள்.  

நாளடைவில் அது 20 நாள்,  10 நாள் என மாறி இப்போது 2-4 நாட்கள் வரை மட்டுமே காணக்கூடும் நிகழ்ச்சி ஆகிவிட்டது.  பெண் என்றாலே ஒப்பனைகளும் அலங்காரங்களும் தான் முன் வந்து நிற்கும். திருமணம் என்றால் போதும் மணபெண் மட்டும் அல்ல திருமணத்தில் கலந்துக்கொள்ள வரும் அனைத்து பெண்களுமே ஒப்பனைகளுக்குள் ஒழிந்து கிடக்கிறார்கள்.

பெண் பிள்ளை பெற்ற அனைத்து பெற்றோரும் குழந்தை பிறந்த நொடி முதல் சிறுக சிறுக  தங்க குண்டுமணிகள் சேர்த்து மொத்தமாக அதை பெண்ணிற்கு போட்டு அழகு பார்க்கும் நாளும் திருமணமே. அப்படி செய்ய வேண்டும் இப்படி செய்ய வேண்டும் என பல நாள் கனவு கண்டு தன் பிள்ளைக்கு திருமணம் செய்து வைத்து கண்ணீர் விடும் தந்தை,  அண்ணன்-தம்பி,  அன்னையை நாம் நிறைய கடந்து வந்துள்ளோம்.

marriage


அதனால் தான் காதல் திருமணம்,  பெற்றோருக்கு தெரியாமலும்,  பெற்றோர் சம்மதம் இன்றியும் திருமணம் செய்தால் ஆத்திரம் அடைகின்றார்கள் பெற்றோர்கள்.

கோலாகலம் என்று சொன்னாலும் பல நேரங்களில் படபடப்பு ,பரிதவிப்பு ,மன அழுத்தம் என அனைத்தும் திருமண வீட்டார்க்கு வந்துவிடும். 

 திருமணம் பேச்சு எடுத்து இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிப்பது ஒரு கட்ட பயணம் என்றால்,  அதன் பின் அதை சுமூகமாக திருமணம் முடிக்கவைக்கும் பயணம் ஓர் பெரிய கட்ட பயணமாகும்.

பல திருமணங்கள் நிச்சயத்திற்கு பிறகும்,  திருமண மேடையில்,  என பல இடங்களில் தடைபட்டு நின்றுவிட்டது என நாம் நிறைய கடந்து வந்துள்ளோம். இந்த கடினமான பயணத்தில் பெண்ணும் மாப்பிள்ளையும் தங்கள் மனதில் பல வண்ணக்கோலங்களோடு பல பயத்தையும் பதட்டத்தையும் கொண்டே பயணிப்பார்கள்.

சீர்வரிசை,  சம்பிரதாயம் முறைகள், பத்திரிக்கை,  உடைகள்,  உணவு, பந்தல்,  முகூர்த்த கால்  என அனைத்து விஷயத்திற்கும் செலவு செய்து பல பெற்றோர்கள் கடனாளியாக வலம் வருவதும் உண்டு.


இதற்கிடையில் புகைப்படமும் காணொளி பற்றி பலரும் யோசிக்க வந்த காலமும் வர,  ஸ்மைல் ப்ளீஸ் என்று ஒருவர் கூறிக்கொண்டே பெண்ணையும் மாப்பிள்ளையும் ஒரே மாதிரி எல்லா திருமணங்களிலும் எடுப்பார்கள் புகைப்படம் எடுப்பவர்கள்.  

பின் திருமணத்திற்க்கு வருகை தந்தவர்கள் அன்பளிப்பை அளிக்கும் தருணத்தையும் சேர்த்து புகைப்படம் எடுத்தார்கள்.  பின் குடும்ப புகைப்படம் எடுக்கப்பட்டது.

இப்போது ஒரு பெரிய பிரமாண்டமான திரைப்படமே எடுக்கப்படுகிறது.  வித விதமான போஸ்கள்,  வித்தியாசமான உடைகள்,  பார்ப்பவர்களை ஈர்க்கும் வகையில் மணமக்களை சுற்றி மலர்கள்,  வண்ணங்கள் நிறைந்த பொருட்கள்,  காதல் ஊட்டும் காவியமாகவே திருமண மண்டபத்தின் அலங்காரம் என எத்தனை எத்தனை வித்தியாசங்களோடு பிரமாண்டமாய் திருமணம் நடக்கிறது. 

திரைப்பட கதாநாயகன் நாயகிக்கூட இப்படி ஓர் அருமையான இடத்தில் புகைப்படம் எடுக்க வாய்ப்பு கிட்டவில்லையே என ஏங்க வைக்கும் அளவு இருக்கிறது தற்போதைய மணமக்களின் புகைப்படங்கள் இருக்கிறது. திரைப்பட பாடலிற்கும் காட்சி அளித்து கொண்டாட்டாம் செய்கின்றனர்.  உண்மையான திரைப்படத்தில் கூட அந்த பாடலின் காட்சிகள் தோற்றுவிடும் இப்போது எடுக்கப்படும்  மணமக்களின் காணொளி காட்சிகள்.


திருமண மேடையில் பெண்கள் அழுவது தான் என இருந்த காலம் போய்விட்டு, பெண்கள் கொண்டாடும் மேடை திருமணம் என்று ஆகிவிட்டது இன்று.  காதல் திருமணமாக இருந்தாலும்,  பெற்றோரால் நிச்சயித்த திருமணமானாலும் கோலாகலம் நிச்சயமே என்கிறது தற்போதைய திருமண நிகழ்ச்சியின் பயணம்.  
 இதற்கிடையில் ஈவண்ட் ப்ளாணர்ஸ் என்று சொல்லப்படும் குழுவோ முகூர்த்த கால் நடுவதிலிருந்து பந்தி பரிமாறுவது வரை அனைத்தும் அவர்கள் பொறுப்பில் கொண்டு  திருமண வீட்டார்க்கு பல பாரத்தை  குறைத்துவிட்டனர்.  அதனால் திருமண வீட்டார்களும் மாப்பிள்ளைக்கும் பெண்ணிற்க்கும் குதூகலம்  ஏற்றுவதாக கூறி ஆட்டமும் பாட்டும் என ஆரம்பம் ஆகிவிட்டது. 

மணமக்கள் மட்டுமின்றி அப்பா -மகள், சகோதரன் - சகோதரி,  அம்மா - மகள்,  அப்பா - மகன்,  மருமகள் - மாமியார்,  என அனைத்லு உறவுகளும் அழகாய் காட்சியாக எடுக்கப்படுகிறது.

சொர்க்கத்தில் நிச்சயத்தது திருமணம் என்பதை இந்த காலத்து திருமணங்கள் உறுதி படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். பல பெண்களின் சிரிப்பை திருமண புகைப்படங்களில் காண்பதோடு இல்லாமல் ஒரு கதாநாயகி நாயகனாகவே வாழ்ந்துவிடுகிறார்கள் மணமக்கள்.  தான் இரசித்த  பாடலுக்கு ஏற்ப காட்சிகள் தந்து விரும்பிய போஸ் கொடுத்து காதல் அமுது அவர்களின்  புகைப்படத்தில் அப்படியே வெளிக்காட்டிவிடும்.  இதற்கு முக்கிய காரணம் கேமராக்களுக்கும் ,எதுவும் சாத்தியம் என்று புகைப்படம் எடுக்கும் நபருக்கும் , பின் அதை சரி செய்யப்படும் நபர்களுக்கும் பெரும் பங்கு உள்ளது.

திருமண செலவில் புகைப்படம் எடுப்போர்க்கும் ஓர் பெரிய கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகிறார்கள் திருமண வீட்டார்கள். அதை பொருட்டாக எண்ணவில்லை இந்த காலத்து இளைஞர்களும்,  பெற்றோரும் ஒரு முறை மட்டுமே காணக்கூடும் நிகழ்ச்சி கொண்டாடியே ஆகவேண்டும் என்றே இருக்கிறார்கள்.

Imporance of photography and videography in marriage