சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

மோனாலிசா ஓவியத்தின் மர்ம புன்னகை !

மோனாலிசா ஓவியம் பார்க்க அவ்வளவு ஒன்றும் அழகாக இல்லையே! பிறகு எப்படி இந்த படம் புகழின் உச்சிக்கு சென்றது?

என்னது இது? ஒரு பொட்டு இல்லை பூ இல்லை கழுத்துல கையில ஒன்னும் போட்டுக்காம, கடமையேனு ஒரு புள்ளை உக்காந்திருக்கு. இதுவா உலகம் முழுக்க பிரபலமா இருக்கு?

அப்படித்தானே தோன்றுகிறது?

உண்மை தான். அதில் என்ன பெருசாக இருக்கிறது என்றுதான் பலர் நினைக்கிறார்கள்.

மர்மம்:

மோனாலிசா ஓவியம் பிரபலமடைய அது ஒரு முக்கிய காரணம். மக்களுக்கு மர்மம் என்றால் மிகவும் பிடிக்கும். மோனாலிசாவின் மர்ம புன்னகையும். அந்த ஓவியத்தில் இருப்பவர் யாரென்றும் தெரியாததே அது பிரபலமடைய ஒரு முக்கிய காரணம்.

டா வின்சி அவருடைய முகத்தையே ஒரு பெண் போல் வரைந்தார் என்பது பிரபலமாக கூறப்பட்டாலும் அது உண்மையா என்று யாருக்கும் தெரியவில்லை.

mona-lisas


வால்டர் பேட்டர் என்னும் ஓர் எழுத்தாளர் “பல முறை இறந்து, கல்லறையின் இரகசியங்களை அறிந்த ஒரு Vampire” என்று கூட கூறினார்.

அந்த பெண்ணின் மெல்லிய புன்னகையின் பின் ஒரு மர்மம் இருப்பதாகவும் கருதப்படுகிறது.

2005இல் தான் Lisa del Giocondo என்னும் பெண்ணின் முகம் அது என்று உறுதியாக கண்டறியப்பட்டது. அதற்குள் அந்த ஓவியம் பல மடங்கு பிரபலமாகி விட்டது.

லியோனார்டோ டா வின்சியின் திறமையின் வெளிப்பாடு. Sfumato என்ற ஒரு கலை வடிவத்தின் சிறந்த வெளிப்பாடாக இந்த ஓவியம் கருதப்படுகிறது

எவ்வளவு நுணுக்கம் என்றால் மோனாலிசா ஒரு முகத்திரை அணிந்திருப்பார். அதுவே உற்று நோக்கினால் தான் தெரியும். அந்த அளவு திறமையான ஒரு கலைநயத்திற்காக அது பிரபலமடைந்தது

திருட்டு:

என்னதான் கலைநயம் இருந்தாலும் 1911இல் நடந்த ஒரு திருட்டு அதை மிகப் பிரபலமாக்கியது.‌ Louvre museumஇல் வைக்கப்பட்டிருந்த மோனாலிசா ஓவியம் திருடப்பட்டது.

26 மணி நேரம் வரை ஒருவருக்கும் தெரியவில்லை அந்த திருட்டை பற்றி. அந்த காலத்தில் Louvre museum தான் உலகத்திலேயே பெரிய கட்டிடமாக இருந்தது. 2,50,000 ஓவியங்களை கொண்ட 1000 அறைகளுக்கு வெறும் 150 காவலர்களே இருந்தனர்.

இந்த திருட்டு நடந்தது என்று தெரிந்தது தான் தாமதம்

ஊடகங்களில் அது பரபரப்பாக பேசப்பட்டது.
கோடிக்கணக்கான மக்கள் அந்த ஓவியம் வைக்கப்பட்டிருந்த வெற்றிடத்தை பார்க்க குவிந்தனர்.

அந்த அருங்காட்சியகத்தின் இயக்குனர் தன் வேலையை ராஜினாமா செய்தார்.
சந்தேகத்தின் அடிப்படையில் புகழ்பெற்ற ஓவியரான Pablo Picasso கைதுசெய்யப்பட்டார்.
இரண்டு வருடத்திற்கு பின் இத்தாலியில் அந்த திருடன் பிடிபட்டான். அவன் பெயர் Vincenzo Peruggia.

மோனாலிசா ஓவியம் வைக்கப்பட்டிருந்த அருங்காட்சியகத்தில் உள்ள ஓவியங்களுக்கு கண்ணாடி பொறுத்தும் வேலை செய்தவன். என்ன தோன்றியதோ தெரியவில்லை, அவனுடன் வேலைபார்த்த இருவர் உதவியுடன் மோனாலிசா படத்தை தூக்கிக்கொண்டு ஓடிவிட்டான்.

இந்த ஊடகங்கள் திரும்பும் இடமெல்லாம் மோனாலிசா மோனாலிசா என்று கூவிய கூவில் எங்கும் அதை விற்க முடியவில்லை‌. இரண்டு வருடம் கழித்து ஒருவாறு அந்த கூவல் அடங்கியதும் விற்க முயன்ற போது கடைக்காரர் போலீசில் பிடித்துக் கொடுத்து விட்டார். இந்த ஊடகங்கள் திரும்ப திரும்ப கூவியதில் பிரெஞ்சு நாட்டு மக்கள் அனைவரும் அதை அவர்கள் நாட்டு பொக்கிஷமாகக் கருதத் துவங்கிவிட்டனர்.

மோனாலிசா கண்டுபிடிக்கப்பட்டது தலைப்பு செய்தியாக வெளியிடப்பட்டது.

பிறகு இத்தாலி, மிலான், ரோம் என்று பல இடங்களில் கண்காட்சியாக வைக்கப்பட்டு மீண்டும் பத்திரமாக Louvre அருங்காட்சியகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அவமரியாதை:

இப்படி பொக்கிஷமாக கருதப்பட்ட மோனாலிசாவை 1919இல் Marcel Duchamp என்பவர் மீசை தாடி வரைந்து அதன் கீழ் ஒரு ஆபாச சொல்லையும் எழுதி வெளியிட்டார்.‌ இது சர்ச்சையை ஏற்படுத்தியது


இப்படி பிரபலமான, மக்களால் மதிக்கப்படும் ஒரு ஓவியத்தை அவமரியாதை செய்தால் பிரபலமடையலாம் என்ற எண்ணத்தில் மேலும் சில ஓவியர்கள் மோனாலிசா ஓவியத்தை மாற்றி வரைந்தனர்.

Salvador Dali என்பவர் தன் முகத்தையே மோனாலிசா முகத்தை போல் வரைந்தார்.

2009இல் Subodh Gupta என்பவர் Duchampஇன் ஓவியத்தை சிலையாக வடிவமைத்தார்.


இப்படி மேலும் மேலும் மோனாலிசாவின் உருவத்தை மாற்றியமைத்ததன் மூலம் அந்த கலைஞருக்கும் பிரபலமடைந்தார். மோனாலிசாவும் மேன்மேலும் பிரபலமடைந்தது.

மரியாதை:

மிகவும் பிரபலமடையவே 1963இல் அமெரிக்காவிற்கும் 1974இல் ஜப்பானிற்கும் சுற்றுலா சென்று வந்தது அந்த ஓவியம்.

அதுவும் எப்படி? சொகுசு கப்பலில் First class cabinஇல் அமெரிக்காவிற்கு பயணம் செய்தது. ஒரு நாளைக்கு 40 ஆயிரம் மக்கள் வந்து பார்த்து சென்றனர்.‌

இப்படி எல்லாமுமாக சேர்ந்து அந்த ஓவியம் இன்று உலகின் மிக புகழ்பெற்ற ஓவியமாக விளங்குகிறது.

That is one of the main reasons why the Mona Lisa painting is so popular. People are very fond of mystery. And the mysterious smile of the Mona Lisa. One of the main reasons for its popularity is that no one in the painting is known.