சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

தமிழ் வீர மங்கை வேலு நாச்சியார்

செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதி -  முத்தாத்தாள் நாச்சியார் அவர்களின்  ஒரே மகள் தான் நம் தமிழ்நாட்டின் வீரமங்கை வேலு நாச்சியார் அவர்கள் .

கிபி. 17 ஆம் நூற்றாண்டில் சிவகங்கை பகுதியை ஆட்சி செய்த இராணி ஆவார் இவர்.   பல மொழிகள் அறிந்தவர்,  பல போர் பயிற்சி பயின்றவர் ஆவார். பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து குரல் எழுப்பி,  ஆயுதம் ஏந்தி போராட்டம் செய்த விடுதலை போராட்ட தலைவி ஆவார். இவரே இந்தியாவின் முதல் பெண் விடுதலை போராட்ட வீரர் ஆவார்.

ஐரோப்பபியரின் படை எடுத்தல் போது பல நெருக்கடிகளை சந்திந்த இவர் இடம் மாறி இடம் மாறி விருப்பாட்சியில் தங்கி ஹைதர் அலியை சந்திந்து உருது மொழியில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராட வேண்டும் என்று பரிந்துரைத்தார். 

உருது மொழியியல் பேசிய வேலு நாச்சியார் அவர்களை கண்டு ஹைதர் அலி பிரமிப்படைந்தார்.   வேலு நாச்சியார் அவர்களின் தலைமையில் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்ட  போர்ப்படையில் ஹைதர் அலி அவர்கள் 5000 குதிரை படை வீரர்கள்,  5000 போர்வீரர்கள்,  பீரங்கி படை ஒன்றையும் அனுப்பி உதவினார். 

வேலு நாச்சியார் அவர்களை காட்டி கொடுக்காமல் வெள்ளையர்களால் தாக்கி உயிரிழந்த உடையாள் என்னும் வீர பெண்மணிக்கு நன்றி செலுத்தும் வகையில் வீரக்கல் நட்டு , அதற்கு தன் மாங்கல்யத்தை காணிக்கையாய் செலுத்தினார். இன்றும் அந்த கோவிலை கொல்லங்குடி வெட்டுடையகாளியம்மன் கோவில் என்று அழைக்கப்படுகிறது. 

தன் கணவரை கொன்ற ஜோஸப் ஸ்மித்தையும் தளபதி  ஜான் ஜோரையும் தோற்கடித்தார் வேலு நாச்சியார். 

பல பெரும் போராட்டங்களில் கலந்து நாட்டை மீட்ட வேலு நாச்சியார் அவர்கள் டிசம்பர் மாதம் 25,1796 இல் உயிர் பிரிந்தார். 

சிவகங்கையில் வேலு நாச்சியார் அவர்கள் உபயோகித்த ஈட்டி,  வாள் எல்லாம் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது. 

வேலு நாச்சியார் அவர்களின் நினைவு தபால் தலையை இந்திய அரசு டிசம்பர் மாதம் 31, 2008 அன்று வெளியிட்டது.

Rani Velu Nachiyar (3 January 1730 – 25 December 1796) was a queen of Sivaganga estate from c. 1780–1790. She was the first queen to fight against the British colonial power in India.She is known by Tamils as Veeramangai ("brave woman").